தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேள்விக்குரிய அரசு நடவடிக்கை!

yesterday
கேள்விக்குரிய அரசு நடவடிக்கை!

கேள்விக்குரிய அரசு நடவடிக்கை!

இந்திய வரலாற்றில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கிளர்ச்சியே பெரும் அரசியல் மாற்றங்களுக்கான அடித்தளமாக அமைந்திருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ஆகியோரின்அழைப்பை ஏற்று வகுப்பறைகளைப் புறந்தள்ளி வீதியில் இறங்கிப் போராடியவர்கள் அன்றைய மாணவர்கள். வெள்ளையர் ஆட்சியே மாணவர் போராட்டங்களை அடக்க நினைத்துத் தோற்றுப்போனது.

விடுதலைக்குப் பின்னரும், இந்தி எதிர்ப்புப்போராட்டம், அவசரநிலை எதிர்ப்புக் களம்,தில்லி பல்கலைக்கழகங்கள் முதல் அண்மையநீட் முறைகேடுகளுக்கு எதிரான ஜந்தர் மந்தர்போராட்டங்கள் வரை—ஜனநாயகத்தை மறுசீரமைக்கவும், அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் மாணவர்சமூகம் எப்போதும் முன்நின்று போராடியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) (a), (b), (c) ஆகியவை குடிமக்களுக்குச் சங்கம் சேரும் உரிமை, அமைதியாக ஒன்று கூடும் உரிமை, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படைஉரிமைகளாக உத்தரவாதம் செய்கின்றன. இவற்றின் மூலம் குடிமக்களும் மாணவர்களும் தங்கள் கருத்துக்களைவெளிப்படுத்தவும், அமைதியான போராட்டங்களை முன்னெடுக்கவும் அதிகாரமும் பெற்றுள்ளனர்.

இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராக,தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், இடதுசாரிக்கட்சிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அவர்களைக் கண்காணிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது; அதே போல் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் வெளியிட்ட உத்தரவில், தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர், முகவரி பட்டியலைச் சேகரித்துச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருப்பது தற்செயலானது எனஎளிதில் கடக்கக் கூடியவையல்ல.

சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவது மட்டும் தீர்வாகாது. எந்தச் சட்ட விதியின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? இதற்குப் பின்னணிசக்திகள் யார்? சங்பரிவார சித்தாந்த ஊடுருவல் அரசு அதிகார வர்க்கத்திற்குள் ஊடுருவியிருக்கிறதா என்பது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். உரிமைகளைப் பறித்தஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசை எதிர்த்து ஆவேசமாக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய சூழலை உருவாக்கியது அரசின் இயலாமைதான். போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம்மாணவர்களின் குரலை முடக்கிவிட முடியாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.