தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பக்கிள் ஓடை தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு

10 hours before
பக்கிள் ஓடை தூர்வாரும்  பணியை  ஆட்சியர் ஆய்வு

பக்கிள் ஓடை தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு

தென்காசி,செப்.01-தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நகர்ப்புற வட்டார வள மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்’ அமைக்கும் பணிகள் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தையும் நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மடத்தூர் அருகேயுள்ள துரைகனி நகரிலிருந்து பக்கிள் ஓடை செல்லும் கால்வாய்கள், 3-வது மைல் பாலத்திலிருந்து திரேஸ்புரம் வரை செல்லும் பக்கிள் ஓடை கால்வாயை அகலப்படுத்துதல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அபிராமி நகர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.