முந்தய பக்கம்

தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

yesterday
தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
<p>தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும், தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த சூழலில், வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு ரூ.40 லட்சம் என்ற வரம்பை மீறி செலவு செய்ததாக, தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் மீது வழக்கறிஞர் அமலன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p>தாராபுரம் ரோடு ஷோவுக்கு ரூ.2.27 கோடியும், மதுராந்தகம் ரோடு ஷோவுக்கு ரூ.1.05 கோடியும் பேரிகார்டுகள் அமைக்க செலவிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram