தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுபான்மை மக்களை குறிவைத்து ஒடுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைவரும் திரள்க!சென்னை தர்ணா போராட்டத்தில் உ.வாசுகி அறைகூவல்

2 hours before
சிறுபான்மை மக்களை குறிவைத்து ஒடுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைவரும் திரள்க!சென்னை தர்ணா போராட்டத்தில் உ.வாசுகி அறைகூவல்
<p>சிறுபான்மை மக்களை குறிவைத்து ஒடுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைவரும் திரள்க!சென்னை தர்ணா போராட்டத்தில் உ.வாசுகி அறைகூவல்</p><p>சென்னை, ஜூலை 31-சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துக்களை கபளீகரம் செய்ய முனையும் ஒன்றிய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்ட திருத்த மசோதா - 2026-ஜ திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சென்னை மாவட்டம்சார்பில் புரசைவாக்கம் தாணா தெருவில் தர்ணா இயக்கம் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி பேசுகையில், என்.ஜி.ஓ.வாக இருந்தாலும், சேவை அமைப்பாக இருந்தாலும், வேறு ஏதாவது அமைப்பாக இருந்தாலும் அந்த அமைப்பு இந்தியாவில் ஏதாவது ஒருமாநிலத்தில் பதிவுசெய்ய வேண்டும். அந்த அமைப்பின்செயல்பாடு இந்தியா முழுவதும் இருக்கலாம். அதற்கு அனுமதி உண்டு. இப்போது புதிய மசோதாவில் எந்த மாநிலத்தில் பதிவு செய்தார்களோ அந்த மாநிலத்தில் மட்டும் தான்செயல்பட முடியும். மற்ற மாநிலங்களில் உதவி செய்ய முடியாது, செயலாற்ற முடியாது எனக் கூறுகிறது.ஆர்எஸ்எஸ் பெறும் பல நூறு கோடி நன்கொடை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ கோடி கோடியாக நன்</p><p>கொடை வருகிறது; ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை வரவு செலவை என்றைக்காவது வைத்திருக்குமா? ஆர்.எஸ்.எஸ். துவங்கிய 1925ஆம் ஆண்டிலிருந்து கிடைத்த நன்கொடை எவ்வளவு என்ற கணக்கை ஏதாவது ஒருஇடத்திலாவது பார்க்க முடியுமா? அப்படியென்றால் ஒழுங்காற்றுச் சட்டம் எல்லாம் மற்றவர்களுக்குத்தான்; இந்த ஒழுங்காற்றுச் சட்டதிருத்த மசோதா இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.க்கு, பாஜகவிற்கு கிடையாது. ஊருக்குத்தான் உபதேசம்.புதிதாக ஒரு சட்டம் போடக் கூடாதா? ஒரு சட்டத்தைத் திருத்தக் கூடாதா?வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை முறையாக வரவு செலவு பார்க்கணும், கணக்கு காட்ட வேண்டும் என்று ஒரு அரசு கேட்பதற்குஉரிமைகிடையாதா? என்று பாஜகவுக்கு ஆதரவான சிலர்கேள்வி கேட்கிறார்கள். இதுபோன்ற அப்பாவித்தனமான கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டியஅவசியம் இல்லை. சாதாரண மக்கள் கேட்டால் நம்ம பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.சொத்துகளை கையகப்படுத்துவதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று. பிரச்சனை சொத்து சம்பந்தப்பட்டது இல்லை. இந்த சொத்துக்கள், சொத்துஇல்லாத சாதாரண ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. எனவே அதை ஒன்றிய அரசு கையகப்படுத்தினால் இழக்கப்போவது இந்த அமைப்புகள் மட்டுமல்ல, இந்த சொத்துகளால் பயன் அடைந்து வரும் பல்வேறுமதங்களை சேர்ந்த ஏழை எளிய, நடுத்தர மக்கள்தான். ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் கேட்டது வினாத்தாள்கசிவுக்கு யார்பொறுப்பு. யாராவது ஒருவர் பொறுப்பேற்று ராஜினாமா செய்யுங்கள். ஏனென்றால் இது முதன்முறையாக நடக்கும் தவறு இல்லை, பல முறைநடைபெற்றுள்ளது. இளைஞர்களின் நீண்ட நாள் போராடியதால், இறுதியில் வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு பதில் சொல்லும் இடத்திற்கு வந்தது.நாசமாகும் கல்வித்துறைகல்வித் துறையே இன்றைக்கு நாசமாகிக் கொண்டிருக்கிறது. தேசியக்கல்விக் கொள்கை என்ற பேரில்ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது படு மோசமான, பிற்போக்கான, அரசியல் சட்டம் சொல்லும் சமத்துவத்திற்கு எதிரான அம்சங்கள் தான். தேசியகல்விக் கொள்கையில் படித்து முடித்தாலும் வேலை கிடைப்பதில்லை. செய்யும் வேலைக்கும் உரிய சம்பளம்வழங்குவது கிடையாது. ஏஐ உட்பட புதிய தொழில்நுட்பங்கள் இன்று இருக்கும் வேலை வாய்ப்பையும் பறித்துக் கொண்டிருக்கிறது.ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களை குறிவைத்து ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் அவர்களின் சித்தாந்தம், கார்ப்பரேட் ஆதரவுக்கொள்கை. எனவே சாதி, மதம், மொழி,இனம் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து போராட முன்வரவேண்டும் என வாசுகி அறைகூவல் விடுத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.