முந்தய பக்கம்

பஞ்சமி நிலங்களை மீட்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

15 hours before
பஞ்சமி நிலங்களை மீட்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

பஞ்சமி நிலங்களை மீட்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக 11-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், அருங்குணம் கிராமத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி,உண்மையான நில உரிமையை கண்டறிந்து, பயனாளிகளிடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செவ்வாயன்று வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளிக்கப்பட்டது.

அந்த மனுவில், பஞ்சமி நிலங்கள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் முழுமையான கள ஆய்வு மற்றும் ஆவண விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, சர்வே எண் 17/6- நிலம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அதன் பயனாளியான அன்பழகனுக்கு அந்த நிலத்தை வழங்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அருங்குணம் கிரா மத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க நேரடி நடவடிக்கைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எஸ். ராமதாஸ்,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram