தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக சிறைவாசமா?
24 Jul 2026, 9:22 pm

தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக சிறைவாசமா?

ஜனநாயகத்தின் உயிரோட்டமே கேள்வி கேட்கும் உரிமையிலும், ஒடுக்கப்பட்டோரின் குர லுக்குத் துணைநிற்பதிலும்தான் இருக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றதற்காகவே கலைஞர்களும் ஆர்வலர்களும் சிறையிலடைக்கப்பட்டிருப்பது, ஜனநாயகக் கொள் கைகளுக்கே விடப்பட்ட பெரும் சவாலாகும்.

நொய்டாவில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மனிதத்தன்மையுள்ள பணிச்சூழலைக் கோரிப் போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தற்காக, கலைஞர் ஸ்ரீஷ்டி குப்தா, நாடகக் கலைஞர் ஆகிருதி சௌத்ரி, பத்திரிகையாளர் சத்தி யம் வர்மா உள்ளிட்ட 8 பேர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கௌதம் புத்தா நகர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களின் பிணை மனுவை சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தி ருப்பது வேதனையளிக்கிறது.

ஒரு கலைஞர் என்பவர் வெறும் பொழுது போக்கை உருவாக்குபவர் அல்ல; சமூகத்தின் அநீதி களைக் கண்டு பொங்குபவரும், எளிய மக்களின் துயரத்தில் பங்கெடுப்பவருமே உண்மையான கலை ஞர். குப்பத்துச் சிறுவர்களுக்குக் கல்வி புகட்டுவது, கலைப் பட்டறைகள் நடத்துவது, மருத்துவ முகாம்கள் அமைப்பது எனத் தங்கள் வாழ்நாளைச் சமூகப் பணிக்காகவே அர்ப்பணித்த இந்த இளம் கலைஞர்களின் சமூக அக்கறையை, ‘வன்முறை க்குத் தூண்டல்’ என குற்றமயமாக்குவது உன்னத மான கலைச் செயல்பாட்டையே குற்றமாகக் கருது வதற்குச் சமமாகும். “கலைஞர்கள் இருக்க வேண்டிய இடம் சிறையிலல்ல; மக்களோடு வீதிகளிலும் நூல கங்களிலும்தான்” என நாட்டின் முன்னணி 2,200-க்கும் மேற்பட்ட கலைஞர்களும் எழுத்தாளர்களும் திரண்டு குரலெழுப்பியுள்ளது இதன் தீவிரத்தை உணர்த்துகிறது.

விசாரணை முடிவடைவதற்கு முன்பே, நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருப்பது, அரசி யல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக ளைப் பறிப்பதாகும். ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதியே’ என்ற சட்டத்தின் அடிப் படை விதியை மீறி, முன்ஜாமீன் மறுக்கப்பட்டுத் தண்டனையாகவே சிறைவாசம் நீட்டிக்கப்படுவது அச்ச உணர்வை ஏற்படுத்தி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சியாகும்.

உத்தரப்பிரதேச பாஜக அரசு, இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, நீதிமன்ற வழி காட்டுதலின்படி செயல்பட வேண்டும். ஸ்ரீஷ்டி குப்தா, ஆகிருதி சௌத்ரி உள்ளிட்ட அனைத்துக் கலைஞர் கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மீதான குற்றச் சாட்டுகளைக் கைவிட்டு, அவர்களை உடனடியா கப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும்.

கலை, கலாச்சாரச் செயல்பாடுகள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றைக் குற்றச் செயல்களாகச் சித்தரிப்பது நாட்டின் ஜனநாயக மற்றும் பண்பாட்டு அமைப்பையே சீர்குலைத்துவிடும். எளிய தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதர வாகக் குரல்கொடுப்பதும், அவர்களுடன் நின்று மனிதநேயத்தைப் பகிர்வதும் எந்தவிதத்திலும் தேசத் துரோகமோ அல்லது வன்முறையோ ஆகிவிடாது. எனவே சிறையிலுள்ள அனைத்துக் கலைஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களையும் நிபந்தனையின்றி உட னடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான சட்டவிரோத வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.