தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயத்தை காக்க உறுதிபூணும் இடதுசாரிகள்! உப்பாறு அணைக்கு நீர் வேண்டும்!

4 Oct 2026, 2:06 am
விவசாயத்தை காக்க உறுதிபூணும் இடதுசாரிகள்!  உப்பாறு அணைக்கு நீர் வேண்டும்!

விவசாயத்தை காக்க உறுதிபூணும் இடதுசாரிகள்! உப்பாறு அணைக்கு நீர் வேண்டும்!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் கிழக்குப் பகுதி அமராவதி ஆற்று பாசனத்தால் ஓரளவு செழிப்பாக இருக்கும் வேளையில், அதன் மேற்குப்பகுதி போதிய நீராதாரங்களின்றி தொடர் வறட்சியை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, உப்பாறு அணைக்கு உரிய முறையில் தண்ணீர் கிடைக்காததால், சுமார் 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து பாசன வசதியை இழந்துள்ளன.

பருவமழையை மட்டுமே நம்பி சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்று குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.

திருமூர்த்தி அணை மற்றும் பி.ஏ.பி. பாசனத் திட்டத்திலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் நீரோடை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. அரசூர் முதல் உப்பாறு அணை வரையிலான பாதையில் சீமைக்கருவேல மரங்கள், அடர்ந்த புதர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மண்டிப்போய் நீரோட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது.

அணைக்கு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டும் போதாது; தண்ணீர் தடையின்றி அணைக்கு வந்து சேரும் வகையில் நீர்வழிப்பாதையை உடனடியாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பதே இதற்கு ஒரே தீர்வு என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாராபுரம் விவசாயிகளின் பிரதான பிரச்சனையாக உள்ள இதனை கம்யூனிஸ்டுகளை தவிர வேறு யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை. இடதுசாரி கட்சிகள் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் இப்பிரச்சனையை முதன்மைப் பொருளாகக் கையில் எடுத்துள்ளது.

உப்பாறு அணைக்கு தடையின்றித் தண்ணீர் கிடைக்க செய்வோம், திருமூர்த்தி அணையில் இருந்து வரும் உப்பாறு ஓடையை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம், 6,000 ஏக்கர் பாசன நிலங்களையும், சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டத்தையும்உயர்த்தி நீண்டகாலக் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் என்கிற வாக்குறுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- மகாதேவன்

சாதியக் கட்டுப்பாடுகள், வறட்சி, நம்பிக்கை துரோகம் குண்டடம் பகுதி மக்களின் அக்னிப் பரீட்சை!

தாராபுரம் தொகுதியின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நமது நிருபர் மேற்கொண்ட களஆய்வில் வெளிப்பட்டவை.குண்டடம் பகுதியில் இன்றும் சாதியக் கட்டமைப்புகளின் ஆதிக்கம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மற்றும் தேர்தல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்குக் கூட பெண்கள் அச்சப்படும் சூழலே நிலவுகிறது. தேநீர் கடைகளுக்கு பின்புறம் மறைவாக நின்று பெண்கள் தேநீர்அருந்தும் காட்சிகளே, இப்பகுதியில் சமூக மாற்றம் எந்த அளவுக்கு மெதுவாக நடக்கிறது என்பதற்கு சாட்சி.ஆனைமலை ஆறு - நல்லாறு கோரிக்கையும்பெரிய அளவிலான தொழில் வளர்ச்சி எதுவும் இல்லாததால், பெரும்பாலான இளைஞர்களும் பெண்களும் பனியன் நிறுவனங்களுக்கும், கூலி வேலைகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விவசாயமே பிரதானத் தொழில் என்பதால், புதுக்கொம்பு பகுதி விவசாயிகள் ஆனைமலை ஆறு - நல்லாறு நீர்ப்பாசனத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

“தண்ணீரை தங்கம் போல் சேமிக்கிறோம்”: குண்டடம் மக்களின் வேதனை

மகேஸ்வரி (மளிகைக் கடை உரிமையாளர், புது நவக்கொம்பு): “தாராபுரத்தில் இருந்து இங்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றும் இன்றும் தண்ணீர்தான் பிரதானப் பிரச்சனை. தண்ணீரை தங்கம் போல் சேமித்துத் தான் காலம் தள்ளுகிறோம். சாலை விளக்குகள் எரிவதில்லை; என் வீட்டில் இரண்டு முறை திருட்டு நடந்தும் ஒரு கண்காணிப்பு கேமரா கூட வைக்கப்படவில்லை. வசதிகள் ஏதுமின்றி ரூ.2,000 வீட்டு வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது.”ராமாத்தாள் (விவசாயத் தொழிலாளி, புது நவக்கொம்பு): “100 நாள் வேலைத் திட்டம் அனைவருக்கும் சீராககிடைப்பதில்லை. அவசர மருத்துவ உதவிக்குக் கூட பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டடத்திற்குத்தான் செல்ல வேண்டும்.”

சுறா பேக்கரி உரிமையாளர் (குண்டடம்): “பேருந்து நிலையத்திற்காக ஒருவர் இலவசமாக இடம் கொடுத்தார். ஆனால், கட்டி முடிக்கப்பட்ட பயன்பாடற்ற நிலையில் அது கிடக்கிறது. பள்ளி அருகே உள்ள இந்த நிலையத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே வந்து திரும்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் கொந்தளிப்பில் இருப்பதற்கு முக்கியக் காரணம், வெற்றி பெற்ற 20 நாட்களில் சத்தியபாமா ராஜினாமா செய்துவிட்டுத் த.வெ.க-வில் இணைந்ததுதான். அவர் மேடையில் கண்ணீர் விட்டாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.ஒட்டுமொத்த அமைச்சர்களும் இங்கு முகாமிட்டிருந்தாலும், இழுபறிக்கு பின்னரே வெற்றி தீர்மானிக்கப்படும்.”கண்ணன் (திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், ருத்ராவதிபாளையம்): “கோழிப்பண்ணையும் விவசாயமும் நிறைந்த பகுதி இது. 20 நாட்களில் எம்.எல்.ஏ பதவி விலகியதால் மக்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்தல் களத்தில் பண விநியோகம்தீவிரமடைந்துள்ளது.”அருள்முருகன் (மேட்டுக்கடை): “நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றஆத்திரத்தில் மக்கள்உள்ளனர். யார் ஜெயித்தால் நமக்கென்ன என்ற ஒருவித சலிப்பும் வெறுப்புமே பெரும்பாலான வாக்காளர்களிடம் மேலோங்கியுள்ளது.”

ஒத்தக்கடை பகுதி பொதுமக்கள்: “அமைச்சர்கள் படை திரண்டு வந்து வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால், எங்கள் பகுதி பயணிகளுக்கு ஒரு நிழற்கூடம் கூட கிடையாது. வளர்ச்சி என்பது வெறும் கேள்விக்குறியாகவே உள்ளது.”ராஜினாமா கூத்தால் எழுந்த அதிருப்தி, தீர்க்கப்படாத குடிநீர் பிரச்சனை, அடிப்படை உள்கட்டமைப்பு இன்மை ஆகியவற்றுக்கு இடையே, பண பலமும் அதிகார பலமும் மோதிக்கொள்ளும் இந்த இடைத்தேர்தலில், எளிய மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பதை தேர்தல் எண்ணிக்கை நாள் தீர்மாணிக்கும்.

- அருண்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.