வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்
23 Jul 2026, 10:01 pm

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்

வாஷிங்டன், ஜூலை 23 - வெனிசுலா ஜனாதிபதி நிகோ லஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா பிளோர்ஸ் மீதான வழக்கு விசாரணை புதனன்று நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு ஆதர வாகவும் பிற நாடுகளின் இறை யாண்மையை மீறும் அமெரிக்க அரசின் மோசமான நடவடிக்கை களுக்கு எதிராகவும் அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். நிகோலஸ் மதுரோ போதைப் பொருள் கடத்தல் கும்பலுடனும், ஆயுத கும்பலுடனும் தொடர்பில் உள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பிரச்சாரம் செய்து வந்தார்.

மேலும் கடந்த ஆண்டு பல வாரங்கள் அந்நாட்டின் கடல் பகுதியை அமெரிக்க ராணுவம் முற்றுகையிட்டு போதைப்பொருள் கடத்துகிறார்கள் என மீனவர்கள் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அவர் களை படுகொலை செய்து வந்தது. பிறகு 2026 ஜனவரி மாதம் 3 அன்று அந்நாட்டின் தலைநகர் மீது தாக்குதல் நடத்தி ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்றது.

அவர்கள் இருவரும் கடத்தப் பட்டு 200 நாட்களை கடந்துள்ளது. அவர்கள் மீது புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மூன்றாவது முறை விசாரணைக்காக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் புதன்கிழமை (ஜூலை 22) ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நடைபெற்ற 15 நிமிட விசார ணையின் போது, இரு தரப்பு வழக்கறி ஞர்களின் கோரிக்கையை ஏற்று நீதிபதி ஆல்வின் ஹெல்தர்ஸ்டீன் விசாரணையை 2027 ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று தெரி வித்துள்ளார். 2026 ஜனவரி 5 அன்று நடைபெற்ற முதல் விசாரணையின் போது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து அமெரிக்கக் குற்றச்சாட்டுகளையும் மதுரோ மறுத்தார்.

மூன்றாவது முறையாக தற்போது விசாரணை நடைபெற்ற போது மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே மதுரோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, வெளிநாடுகளில் எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் இருக்கக் கூடாது எனவும் அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் ஜனாதிபதியை சட்டவிரோத மாக கடத்தி அவரை விசாரிப்பது அநியாயமானது மற்றும் குற்றச் செயல்.

இது அமெரிக்காவின் கொள்கையே இவ்வாறு கடத்துவது தான் என கூறுவது போன்றது. உலக நாடுகள் இதைக் கவனித்து வருகின்றன. இப்போது அமெரிக்க அரசை மக்கள் நம்பவில்லை அமெரிக்காவின் இந்த கைது மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். “வெனிசுலா, ஈரான் மற்றும் கியூபா மீதான அமெரிக்காவின் நட வடிக்கைகளை நாங்கள் மறக்க வில்லை, அமெரிக்கா செய்துள்ள குற்றங்களையும் மறக்கவில்லை.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று போராட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அரசியல் எழுத்தாளர் சாரா பவுண்டர்ஸ் கூறியுள்ளார்.