7 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் மாயம் உத்தரகண்டில் சுரங்க விபத்து
14 Aug 2026, 9:09 pm

7 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் மாயம் உத்தரகண்டில் சுரங்க விபத்து

சமோலிஉத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மேய்ப்பூர் (பிகல்கோட்டி) பகுதியில் நீர்மின் நிலையச்சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. மலைச்சாரலில் அமைக்கப்பட்டு வரும், இந்த சுரங்கப் பாதையை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன்நிறுவனம் அமைத்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் சுரங்கப்பாதைக்குள் திடீரென நீரும், கட்டடக் கழிவுகளும் திடீரெனப் புகுந்தன.இதனால் சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 24 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.பல்வேறு முயற்சிக்கு இடையே 7 பேர் சடலங்களாகவும், 14 பேர் உயிருடனும் (காயத்துடன்) மீட்கப்பட்டனர். காயமடைந்த 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 3 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

மழை இல்லாமல் நீர் புகுந்தது எப்படி?

மேய்ப்பூர் பகுதியில் வியாழனன்று மழை பெய்யவில்லை. நிலச்சரிவும் ஏற்படவில்லை. ஆனால் நீரும், கட்டடக் கழிவுகளும் திடீரெனப் புகுந்துள்ளன. கடந்த வாரம் பெய்த மழையின் நீர்க்கசிவு வியாழனன்று வரை நீடித்து இருக்கிறது. ஆனால் கட்டுமானத்தை கவனிக்கும் இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம், இந்தவிவகாரத்தைகண்டுகொள்ளாததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.