மத்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை மறைக்கும் ஒன்றிய அரசு சமூகநீதிக்கு ஆபத்து என டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கண்டனம்
1 hour before

மத்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை மறைக்கும் ஒன்றிய அரசு

சமூகநீதிக்கு ஆபத்து என டாக்டர் வி.சிவதாசன் எம்.பி. கண்டனம்

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒன்றிய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவும் ஆசிரியர்காலிப்பணியிடங்கள் குறித்த முறையான விவரங்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று மார்க்சிஸ்ட்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் தெளிவான பதிலளிக்கவில்லைஎன்று குறிப்பிட்டுள்ளார்.

பதிலளிக்க மறுக்கும் அரசு

நிறுவன வாரியான ஆசிரியர் காலிப்பணியிடங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான விவரங்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அரசு விவரம் தரவில்லை. பி.எச்.டி (Ph.D.) சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், அதற்கு ஏற்ப ஆசிரியர் பலமும் ஆராய்ச்சி கட்டமைப்புகளும் உயர்த்தப்படவில்லை என்பதை அரசின் புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்துகின்றன.

சமூக நீதிக்கு எதிரான போக்கு

உயர்கல்வித் துறையில் தொடரும் இந்த அலட்சியம், இந்தியாவின் ஆராய்ச்சித் திறனையும், அரசியல் சாசனத்தின்சமூக நீதி உறுதிமொழியையும் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக நிறுவனம்வாரியான மற்றும் பிரிவு வாரியான முழுமையான காலிப்பணியிட விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், தாமதமின்றி அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் டாக்டர்வி.சிவதாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.