தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா உற்சாகமாக துவங்கியது!

2 hours before
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா உற்சாகமாக துவங்கியது!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா உற்சாகமாக துவங்கியது!

நாமக்கல், ஆக.2-கொல்லிமலையில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் புகழை போற்றும் வகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழாமற்றும் மலர் கண்காட்சி ஞாயிறன்று உற்சாகமாக துவங்கியது.கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, வில்வித்தையில் சிறந்து விளங்கியதுடன், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட மன்னராகவும், தான தர்மங்களில் சிறந்து விளங்கியவராகவும் வரலாற்றில் போற்றப்படுகிறார். அவரது பெருமையை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா, கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி அரங்கிலும், மலர் கண்காட்சி வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவிலும் ஞாயிறன்று தொடங்கியது. இவ்விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொ.சந்திரசேகர் மற்றும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு, வல்வில் ஓரியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, செம்மேட்டில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர். கண்காட்சியில் குழந்தைகளையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் ரோஜா, கார்னேசன், ஜெர்பிரா, லில்லியம், ஆர்கிட் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களைக்கொண்டு ஆடு, கோழி, கன்றுக்குட்டி, வண்ணத்துப்பூச்சி, நாட்டிய பெண்கள், முயல், பிறைநிலா மற்றும் காதல் சின்னம் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்காக சுமார் 60 ஆயிரம் மலர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், பல்வேறு காய்கறிகளைக் கொண்டு டிராகன், கழுகு, முதலை ஆகிய உருவங்களும், சிறுதானியங்களை பயன்படுத்தி இந்தியவரைபடம் மற்றும் மீன் வடிவங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மருத்துவச் செடிகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்த தகவல்களும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வண்ணமயமான மலர் அலங்காரங்கள் மற்றும் கலைநயமிக்க வடிவமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கொல்லிமலைக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலர் கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். விழாவையொட்டி கொல்லிமலையில்திருவிழா சூழல் நிலவுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.