முந்தய பக்கம்

விளிம்பு நிலை மக்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

8 hours before
விளிம்பு நிலை மக்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

விளிம்பு நிலை மக்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக 25-திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகர மேம்பாடு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் 35 க்கு மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த குடியிருப்புகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் விறகு வெட்டுதல், செங்கல் சூளை, திருமண மண்டபங்களில் துப்புரவு உள்ளிட்ட வேலைகள் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

மேற்படி குடும்பங்களுக்கு நகராட்சி சார்பாக சொத்து மற்றும் குடிநீர் குழாய் வரி வசூலிக்க நோட்டிஸ் வழங்கப்பட்டது. இந்த வரிகளை ஏழ்மையான பழங்குடியினர் வாழ்நிலை கருதி வசூலிக்ககூடாது என்றும் வரி விலக்கு அளிக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தவாசி வட்டாரக்குழு சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கட்சியின் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் செவ்வாய்க்கிழமை அன்று (ஆக.25) 50க்கு மேற்பட்டோர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், எல்லப்பன், கிளை செயலாளர்கள் ரேணுகா, தேவராஜ், நகர செயலாளர் ராதா

கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram