காயப்படுத்தாதீர்கள்
21 Nov 2026, 9:23 pm

காயப்படுத்தாதீர்கள்

பெண்களின் உடலை நோக்கிய உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்

பெண்களின் கண்ணியத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கத் தயங்குவது ஏன்

இன்னும் எத்தனை காலத்திற்கு ஒரு பெண்ணை வெறும் உடலாகப் பார்ப்பீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு ஒரு பெண்ணின் பாதுகாப்பை ஆண்களின் பொறுப்பாக மட்டுமே கருதுவீர்கள்?

தனியாக வாழும் பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறமையும், துணிவும், கல்வியும் கிடையாதா?

பெண்களின் உரிமைக்காகப் பேசுவதாகக் கூறுபவர்களின் மௌனம் ஏன்? அனைத்திலும் அரசியலைப் புகுத்த வேண்டுமா? எல்லாப் பெண்களும் தங்கள் கணவர்களைவிடத் தங்களுக்குப் பிடித்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன மனநிலை?

சம்பந்தப்பட்ட செய்தி உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்க இத்தனை காலதாமதம் ஏன்? காலம் தாழ்த்தும் பொறுப்பாளர்களும் தங்கள் கடமையிலிருந்து தவறியவர்கள்தானே?

சிங்கப்பெண்கள் படை இந்த நேரத்தில் எடுத்திருக்க வேண்டிய துணிச்சலான நடவடிக்கைகள்தானே தலைப்புச் செய்திகளாக இருக்க வேண்டும்!

‘இம்’ என்றால் சிறைவாசம், ‘ஏன்?’ என்றால் வனவாசம் என்ற நெருக்கடியான சூழலை ஏன் உருவாக்குகிறார்கள்? எதை மறைக்க முயற்சி செய்கிறார்கள்?

எந்தத் துறையில் பணியாற்றினாலும் பெண்களுக்கு உரிய மரியாதையும் கண்ணியமும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை

ஆனால், படித்து, தனது அறிவாலும் திறமையாலும் அதிகாரத்தைப் பெற்ற ஒரு பெண் அதிகாரிக்கு ஏன் மௌனமே பரிசாக வழங்கப்படுகிறது?

ஒரு பெண் உயர்ந்த நிலையை அடைவது அவரது உடலால் அல்ல; அழகால் அல்ல; அவரது அறிவாலும் உழைப்பாலும் திறமையாலும் மட்டுமே!

அவர் யாரையும் மகிழ்விப்பதற்காகப் பணிக்கு வந்தவர் அல்ல. தனது பொறுப்பை நிறைவேற்றவும், தனது திறமையை நிரூபிக்கவும் வந்தவர்.

பெண்களுக்குத் தேவை அனுதாபம் அல்ல; உரிமை! பாதுகாப்பு மட்டுமல்ல; சுதந்திரமும் கண்ணியமும்!

யார் தடுத்தாலும் உண்மைக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை!

பெண்களின் குரலை ஒடுக்க நினைப்பவர்கள் வரலாற்றின் முன் ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!

வனிதா, ஐபிஎஸ் (பணி நிறைவு)