விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீடு
9 hours before

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீடு

சென்னை, ஆக. 30-விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர்’ வெளியீட்டு விழா

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மலரை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தொல்.திருமாவளவன், இந்தியாவை இந்து நாடாக மாற்றும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் சதியை முறியடிக்கவே தமிழ்த்தேசியம் அவசியமாகிறது என்றார். சாதி ஒழிப்பு, மதச்சார்

பின்மை, மாநில சுயாட்சி மற்றும் தேசியஇனங்களின் ஐக்கியம் ஆகிய நான்கைக் கொண்டது விசிக-வின் தமிழ்த்தேசியம் எனவும், இது தனிநாடுகோரிக்கையல்லாமல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சிலர் திரிபுவாத தமிழ்த்தேசியம் பேசி பெரியாரையும் அம்பேத்கரையும் எதிர்க்கும் நிலைஆபத்தானது எனச் சுட்டிக்காட்டிய அவர், விசிக ஆளும் கட்சிகளில் ஒன்றாக மாறியுள்ளதைச் சகிக்காமல் சிலர்அவதூறு பரப்புகின்றனர் என்றும், ஆளும் கட்சியைத் தீர்மானிக்கிற இயக்கமாக உள்ள விசிகஇனி ஆளும் கட்சியாகப் பரிணமிக்கும் என்றும் தெரிவித்தார்.

விழாவில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திரைக்கலைஞர் ஆர்.பார்த்திபன், பொதுச்செயலாளர்கள் து.ரவிக்குமார் எம்.பி., ம.சிந்தனைச்செல்வன், பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர்கலந்து கொண்டு உரையாற்றினர்.