தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேடந்தாங்கல் நவீன சுற்றுலாத்தலமாக மாறும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி வாக்குறுதி

2 hours before
வேடந்தாங்கல் நவீன சுற்றுலாத்தலமாக மாறும்  சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி வாக்குறுதி

வேடந்தாங்கல் நவீன சுற்றுலாத்தலமாக மாறும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி வாக்குறுதி

மதுராந்தகம், செப்.21-வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை நவீன சுற்றுலாத்தலமாக பறவைகள் அதிகம் வரும் அளவிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) தொகுதிக்குட்பட்ட அச்சரப்்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் பகுதியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி தனது 2ஆவது நாள் தேர்தல்பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து வளையபுத்தூர், துறையூர், சித்திரைகூடம், விநாயகநல்லூர், கரிக்கிலி, கொளத்தூர், சித்தாமூர், வெள்ளபுத்தூர்,பாப்பநல்லூர், பாம்பயம்பட்டு, தீட்டாளம், கடம்பூர், ஆலப்பாக்கம், எல்.எண்டத்தூர், வைப்பணை, கூடப்பாக்கம், பொரும்பாக்கம், தண்டலம், தண்டரை,தண்டரைபேட்டை உள்ளிட்ட பல்வேறுகிராமங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கிராமங்கள் தோறும் அவருக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.இப்பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பா.சுகந்தி பேசியதாவது:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை நவீன சுற்றுலாத்தலமாக மாற்றி, பறவைகள் அதிகளவில் வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அங்கு நவீன குழந்தைகள் பூங்கா, செயற்கை நீரூற்று உள்ளிட்ட அடிப்படை மற்றும் சுற்றுலாவசதிகளை ஏற்படுத்தி உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் குரல் கொடுப்போம்.விநாயகநல்லூர் பகுதியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தி மீட்கப்பட்டு அரசின் வசம் உள்ள 34 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, நிலமற்றபட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுப் பண்ணை விவசாயமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டும், அவைஇன்னும் வருவாய் கணக்கில்முறையாக ஏற்றப்படாமல் உள்ளதால் மக்கள் பல்வேறு அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.

தாமதமின்றி அவற்றை வருவாய் கணக்கில் ஏற்றி கணினிப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்கவும், கிராமப் பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக்களைந்து, பணியின் நாட்களை 200 நாளாக உயர்த்தி, தினக்கூலியை ரூ.700 ஆக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

இந்தப் பிரச்சாரப் பயணத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.அர்ஜன்குமார், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் வி.வீராசாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எல்லப்பன், முருகன் மற்றும் இடதுசாரி கட்சிகளின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் சென்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.