வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் இடமாற்றம் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம்
13 hours before

வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் இடமாற்றம் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம்

வேலூர், செப்.10-வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த நுகர்வோர் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று உண்ணாநிலைப போராட்டம் நடைபெற்றது.

வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தைக் கிருஷ்ணகிரிக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர்கள் அன்றைய தினமே ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 7ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி யில் அந்தநீதிமன்றம் செயல்படத் தொடங்கி யதைத் தொடர்ந்து, அன்றைய நாள் முதலே வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 9 புதன்கிழியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், வியாழக்கிழமையன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

வேலூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வெற்றிவேலன் மற்றும் செயலாளர் பத்மநாதன் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கிய இப்போராட்டத்திற்கு, பார் அசோசியேசன் சங்கத் தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் வேலூர் மக்களவை உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்துப் பேசினார். மேலும், குடியாத்தம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரஞ்சித் குமார், ராணிப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கலந்து கொண்டனர்.