முந்தய பக்கம்

வேலூரில் தமுஎகச முப்பெரும் விழா

2 hours before
வேலூரில் தமுஎகச முப்பெரும் விழா

வேலூரில் தமுஎகச முப்பெரும் விழா

வேலூர், செப்.27-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) வேலூர் கிளை சார்பில் பாரதியார்நினைவு தினம், ஆசிரியர் தினம் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டும் முப்பெரும் விழா வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க இல்லத்தில் நடைபெற்றது.கிளைத் தலைவர் ஆர்.எஸ். அஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் டி. நேதாஜி அனைவரையும்வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர் முல்லைவாசன் சிறப்புரையாற்றினார். விழாவில் வேலூர் மாவட்டத்தில்உள்ள அரசுப் பள்ளிகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருதுகள்வழங்கி கெளரவிக்கப்பட்டன.நிகழ்ச்சியில் கவிஞர் மா. சினேகலதா, தமிழாசிரியர் வாரா, தமுஎகச நிர்வாகிகள் எஸ். சுரேந்திரன், அந்திக்காற்றுபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram