தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மரண பயத்தில் தினமும் வாகன ஓட்டிகள்

yesterday
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மரண பயத்தில் தினமும் வாகன ஓட்டிகள்

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மரண பயத்தில் தினமும் வாகன ஓட்டிகள்

விழுப்புரம், நவ.24-விழுப்புரத்தின் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சாவகாசமாக நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வண்டி ஓட்ட வேண்டி உள்ளது.

விழுப்புரம் மாவட்ட த்தின் தலைநகராக விளங்குவது விழுப்புரம் நகரம். இந்த நகரத்திற்கு புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் இருந்தும் தினம்தோறும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதில் பேருந்துகள், வணிக வாகனங்கள், கிராமப் புறங்களில் இருந்து இரு

சக்கர வாகனங்கள் எனஆயிரக்கணக்கான வாக னங்கள் வந்து செல்கின்றன. விழுப்புரம் நகரத்திற்கு அலுவலகம், கடைகள், சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக பொதுமக்களும் வாக னங்களில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அனைத்து சாலைகளிலும் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதோடு வழியை மறித்துக்கொண்டு நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் சாலைகளை அடைத்து கொண்டு நிற்கும் மாடுகளால் மாணவ, மாணவிகளும் அவதிப்படுகின்றனர்.

இதனால் உடனடி யாக நகராட்சி நிர்வா கம் மாடுகளின் உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.