தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான உயர்கல்வி கிடைக்கச் செய்ய விஐடி உறுதி வேந்தர் கோ.விசுவநாதன் நம்பிக்கை

1 hour before
கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான உயர்கல்வி கிடைக்கச் செய்ய விஐடி உறுதி  வேந்தர் கோ.விசுவநாதன் நம்பிக்கை

கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான உயர்கல்வி கிடைக்கச் செய்ய விஐடி உறுதி வேந்தர் கோ.விசுவநாதன் நம்பிக்கை

வேலூர், அக். 6-கிராமப்புற மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை விரிவுபடுத்த விஐடி நிறுவனம் உறுதியாக உள்ளது என்றுஅதன் வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தலைமைவகித்து பேசிய அவர், தரமான உயர்கல்வி தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது என்றும், 2008 முதல் செயல்படும் விஐடி 'ஸ்டார்ஸ்' திட்டம் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 100% இலவசக் கல்வியை வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி (ஓய்வு) ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை விருந்தினராகவும், இன்-ஸ்பேஸ் விண்வெளித் துறை இயக்குநர் டாக்டர் வினோத் குமார் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். விழாவில் 3,062 இளநிலை, 72 முதுநிலை, 156 ஒருங்கிணைந்த முதுநிலை, 38 ஆய்வாளர்கள் மற்றும் ஸ்டார்ஸ் திட்டத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் உட்பட மொத்தம் 3,571 பேருக்குப் பட்டங்கள்வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் விஐடி துணைத் தலைவர் டாக்டர் சங்கர் விசுவநாதன், விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், உதவிதுணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் பேராசிரியர் சதீஷ் குமார் மோத், பதிவாளர் டாக்டர் ஞான பிரகாஷ் மிஸ்ரா மற்றும் இணைத்துணைவேந்தர் டாக்டர் டி.பி. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.