தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிய போட்டியில் அசத்தல்: வித்யா ராமராஜுக்கு உற்சாக வரவேற்பு

4 Oct 2026, 2:16 am
ஆசிய போட்டியில் அசத்தல்: வித்யா ராமராஜுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய போட்டியில் அசத்தல்: வித்யா ராமராஜுக்கு உற்சாக வரவேற்பு

கோவை, அக்.3-ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம்வென்று, இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவின் 43 ஆண்டுகால வரலாற்று சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராமராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷா படைத்த 55.42 விநாடிகள் எனும் தேசிய சாதனையை, இம்முறை 55.41 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார் கோவையை சேர்ந்த வித்யா. அத்துடன் தொடர் ஓட்டப் போட்டிகளிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார். இந்நிலையில், போட்டிகள்முடிந்து கோவை விமான நிலையம்வந்தடைந்த அவரை, பெற்றோர் கண்

ணீர் மல்க வரவேற்றனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த் சால்வை அணிவித்து வாழ்த்துதெரிவித்தார். தொடர்ந்துதிறந்த வாகனத்தில் மீனாட்சிபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு, மதுக்கரை, நாச்சிபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராமராஜ், ”கோவை மக்களின் இந்த அன்பு நெகிழ்ச்சிய

ளிக்கிறது. 43 ஆண்டுகால சாதனையை முறியடித்த நொடியை மறக்க முடியாது. விளையாட்டுத்துறைக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளித்து வருகிறது. எனதுஅடுத்த இலக்கு உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்தான். இளைஞர்கள் கடின உழைப்பைநம்பினால் நிச்சயம் சாதிக்கலாம்,” என தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.