விருதாசலத்தில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
2 hours before

விருதாசலத்தில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

கடலூர், அக்.15-விருத்தாசலம் மணிமுத்தாறு கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், தன்னார்வலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, வீடுகளில் குப்பைகளை நான்கு வகைகளாகத் தரம் பிரித்து வழங்கும் நடைமுறையை ஆய்வு செய்த ஆட்சியர், முறையாகக் குப்பைகளைத் தரம் பிரிக்கும் வீடுகளைப் பாராட்டும் வகையில் வில்லைகள் ஒட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். மேலும், குடிநீரின் தரத்தைப் பரிசோதித்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்து குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகர்மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், நகராட்சி ஆணையர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.