தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்க மாநிலம் ஜோதிநகர் காலனியில் பாஜகவிற்கு வாக்களிக்காததால் முஸ்லிம் மக்களுக்கு குடிநீர் நிறுத்தம்

1 Sept 2026, 9:18 pm
மேற்கு வங்க மாநிலம் ஜோதிநகர் காலனியில் பாஜகவிற்கு வாக்களிக்காததால் முஸ்லிம் மக்களுக்கு குடிநீர் நிறுத்தம்

மேற்கு வங்க மாநிலம் ஜோதிநகர் காலனியில் பாஜகவிற்கு வாக்களிக்காததால் முஸ்லிம் மக்களுக்கு குடிநீர் நிறுத்தம்

கொல்கத்தாபாஜக ஆளும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ளது சித்பூர். அங்குள்ள ஜோதிநகர் காலனியில்சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் ஆவர். இந்துக்களும் வசிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஜோதிநகர் காலனியில் கடந்த மே 29 முதல், 90 நாட்களுக்கும் மேலாக குடிநீர்விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சில தெருக்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜோதிநகர் காலனியில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் எவ்வித பிரச்சனையும்இல்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மாற்றுவழியின்றி மக்கள் அசுத்தமான ஆற்றுநீரில் குளிப்பதால் குழந்தைகளுக்குத் தோல் நோய்ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளுக்குக் கூட இறந்தவர்களை அசுத்தமான ஆற்றுநீரைக் கொண்டே குளிக்கவைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஜோதிநகர் காலனிமுஸ்லிம் பெண்கள் காசிப்பூர்

பாஜக எம்எல்ஏ ரித்தேஷ் திவாரியை சந்தித்து குடிநீர் தொடர்பாக முறையிட்டனர். அப்போது ரித்தேஷ் திவாரி,”ஜோதிநகர் காலனியின் நிலம் துறைமுக அறக்கட்டளைக்குச் சொந்தமானது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காததால் அங்கு குடிநீர்நிறுத்தப்பட்டுள்ளது. நான்தான் நிறுத்தச் சொன்னேன். முஸ்லிம்கள் பாஜகவிற்கு வாக்களிக்காமல் எதற்காக மசூதி கட்டினீர்கள்? வீட்டிலேயே தொழுகை செய்ய முடியாதா? தண்ணீரையும் மின்சாரத்தையும் மீட்க நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்” என மத ரீதியாக தாக்குதல் நடத்தும் தொனியில் பேசியுள்ளார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத நல்லிணக்கத்துக்கும் மிரட்டல்

இத்தகைய சூழலில், ஜோதி நகர் காலனிக்கு அருகே வசிக்கும் சுவாதி என்ற இந்து பெண் கூறுகையில்,“இப்பகுதியில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் முஸ்லிம் மக்கள் அவதிப்பட்டு வருவதால், இந்துக்களாகிய நாங்கள் முடிந்த வரை முஸ்லிம்மக்களுக்கு சிறிதளவு தண்ணீரைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம். ஆனால் தண்ணீர் பகிர்வது அதிகாரிகளுக்குத் தெரிந்தால் தங்களது பகுதிக்கு வரும் குடிநீர்விநியோகமும் நிறுத்தப்பட்டுவிடுமோ? என்ற அச்சம் உள்ளது. காரணம் அதிகாரிகளின் மிரட்டல் அப்படி உள்ளது” என அவர்குற்றம்சாட்டியுள்ளார். காவல்நிலையம் மற்றும் அதிகாரிகளை நாடியும் தீர்வு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கொல்கத்தாஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.