மேற்கு வங்க முதலமைச்சரின் ஆபத்தான கேள்வி
7 Aug 2026, 10:11 pm

மேற்கு வங்க முதலமைச்சரின் ஆபத்தான கேள்வி

மேற்கு வங்கத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புச் திருத்தச் செயல்பாட்டில் சேர்க்கப்படாத 27 லட்சம் பேரைச் சுட்டிக்காட்டி, அவர்கள் குடியுரிமை இல்லாதவர்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இக்கூற்றை உடனடியாக மறுத்த அம்மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர், கணக்கெடுப்பு என்பது வாக்காளர் பட்டியலிலிருந்து முற்றிலும் தனித்துவமானது என்றும், அந்நிய நாட்டவர் உட்படநாட்டின்எல்லையிலுள்ள ஒவ்வொரு நபரும் இதில் கணக்கிடப்படுவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்தியச் சட்டத்தின்படி வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுரிமை தீர்மானம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகிய நான்கும்முற்றிலும் வேறுபட்ட சட்டப்பூர்வ நோக்கங்களைக் கொண்டவை. வாக்காளர் பட்டியல் தொகுதியில் வாக்களிக்கத்தகுதியானவரைத் தீர்மானிக்கிறது; மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்கிறது;குடியுரிமை என்பது குடியுரிமைச் சட்டத்தின் கீழ் மட்டுமே தீர்மானிக்கப்பட முடியும். மேலும், மேற்குவங்க அரசுத்தரப்பில் கூறப்படும் 27 லட்சம்’ பேரின் மேல்முறையீடு என்ற புள்ளிவிவரத்திற்கு முறையான சான்றுகள் இல்லைஎன்பதோடு, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளுடன் இத்தரவுமுரண்படுகிறது.

1948ஆம் ஆண்டின் மக்கள் தொகைகணக்கெடுப்புச் சட்டத்தின்படி, கணக்கெடுப்புத் தரவுகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். இத்தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுவதோ அல்லதுகுடியுரிமைச் சோதனையாக மாற்றுவதோ சட்டவிரோதமானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு, இம் மாநில பெண்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி திட்டம் மற்றும்ரேஷன் கார்டு சரிபார்ப்பு போன்ற பிற நிர்வாகத் துறைகளில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரதிருத்தமுடிவுகளை மேற்கு வங்க அரசு பயன்படுத்தி வருகிறது.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரதிருத்த பணி குறித்த வழக்கில், தேர்தல் ஆணையம் வாக்காளர் தகுதிக்காக மட்டுமே குடியுரிமை குறித்து விசாரிக்க முடியும் என்றும்,அது குடியுரிமையை இறுதியாகத் தீர்மானிக்கமுடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, ஒரு நபர் வாக்காளர் பட்டியலின் சிக்கலான மேல்முறையீட்டு செயல்பாட்டில்பங்கேற்காததை, அவர் இந்தியரே அல்ல என்பதற்கான ஆதாரமாகச் சித்தரிக்க முயல்வது மேற்குவங்கமுதல்வரின் ஒரு தீவிரமான எல்லை மீறலாகும்.