முந்தய பக்கம்

மேற்கு வங்கம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு

17 Jul 2026, 12:23 pm
மேற்கு வங்கம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து -  2 குழந்தைகள் உயிரிழப்பு
<p>மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மற்றும் சைக்கிள் ஒன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெர்ஹம்பூர் பகுதியில், கர்ணசுபர்ணா ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராஸிங் திறந்திருந்த நிலை,இன்று காலை சுமார் 7.30 மணியளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றது. அப்போது, திடீரென வந்த நிம்திதா-கட்வா பயணிகள் ரயில் பள்ளி வாகனம் மற்றும் சைச்கிள் ஒன்றின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram