தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

yesterday
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான  மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தேர்தல் ஆணையம், விசாரணைத் தீர்ப்பாயங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லிமேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்குப் (எஸ்ஐஆர்) பிறகு, பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், தகுதியை நிரூபிக்கக் கோரி 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் வாக்குரிமை நிறுத்தி வைக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பின. நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலைக் (மே மாதம் நடைபெற்றது) கருத்தில் கொண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணைத் தீர்ப்பாயங்களை அமைத்தது. ஆனால், போதுமான நேரம் மற்றும் நீதிபதிகள் இல்லாததால், 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இல்லாமலேயே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் பாஜக முதல்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியைக்கைப்பற்றியதா? என்ற சந்தேகமும் எழுந்தது. தற்

போது மேற்கு வங்கத்தில் வாக்காளர்களால் தாக்கல் செய்யப்பட்ட 22 லட்சம் மேல்முறையீடுகள் உட்பட மொத்தம் 38 லட்சம் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இன்னும் வாக்குரிமைஇல்லாதவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாக்காளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,”இது ஒரு சிறியஎண்ணிக்கை அல்ல; மிகப்பெரிய எண்ணிக்கை. இன்னும் 22 லட்சத்திற்கும் அதிகமான இத்தகைய மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.

மாநகராட்சித் தேர்தலுக்கு முன்பு யாருடையமேல்முறையீடுகள் முடித்து வைக்கப்படவில்லையோ, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது அவர்களின் ஜனநாயக உரிமைகளை முற்றிலும் நியாயமற்ற முறையில் பறிப்பதாகிவிடும்” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு,”மேல்முறையீடுகளுக்கு விரைந்து தீர்வு காண ஏதுவாக, கொல்கத்தாவின் மையப் பகுதிகளில் அல்லது நகரின் வெவ்வேறு இடங்களில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களுக்குப் பொருத்தமான மாற்று இடங்களைத் தேர்தல் ஆணையம் அடையாளம் காண வேண்டும். மேற்குவங்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியின் போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவாக்காளர்களின் வழக்குகளுக்கு, மேல்முறையீடுகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்காளர்களை நீக்கக் கோரி

தலைமைத் தேர்தல் அதிகாரி தாக்கல் செய்த மேல்முறையீடுகளை தற்போதைக்கு விசாரிக்கத் தேவையில்லை. கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்துத் தீர்ப்பா

யங்களின் எண்ணிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகரிக்க வேண்டும். வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு,கொல்கத்தா மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகள் தொடர்பான மேல்முறையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.