தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2025-ல் உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு

21 Jul 2026, 7:42 pm
2025-ல் உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு

2025-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலகளவில் 2030-க்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கும் இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) நிறைவேற்றியுள்ளது.

"உலகளாவிய சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தின் முன்னேற்ற அறிவிப்பு" என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம், 162 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்த நிலையில், எந்த நாடும் வாக்கெடுப்பைப் புறக்கணிக்கவில்லை.

2020 ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட 74/299-ஆம் எண் தீர்மானத்தை மீண்டும் நினைவூட்டும் இந்தத் தீர்மானம், 2021–2030 காலத்தை "சாலைப் பாதுகாப்பிற்கான இரண்டாவது செயல்பாட்டு தசாப்தம்" என அறிவித்ததையும், 2030-க்குள் சாலை விபத்து உயிரிழப்புகள் மற்றும் காயங்களை 50 சதவீதம் குறைக்கும் இலக்கையும் வலியுறுத்துகிறது.

மேலும், சாலைப் பாதுகாப்பு கல்வி, பாதுகாப்பு கலாச்சாரம், சுகாதார விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்றும், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்களும் குறைந்தபட்ச பாதுகாப்புத் தரநிலைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாலைப் பயனாளர்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதைத் தடுக்க பாதுகாப்பு விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் பொறுப்பேற்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும், திட்டத்தின் தொடக்கம் முதல் நிறைவு வரை பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொள்ளவும் உறுப்புநாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறுகையில், 5 முதல் 29 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு சாலை விபத்துகளே தொடர்ந்து முக்கிய காரணமாக உள்ளன என்றார். 2025-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

"அவர்களுக்காக நாம் உடனடியாகச் செயல்பட வேண்டிய கடமை உள்ளது," என்று அவர் வலியுறுத்தினார்.

ஐ.நா. பொதுச் செயலாளரின் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்புத் தூதர் ஜீன் டோட் கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பே சாலை விபத்துகள் உலகின் மிகப்பெரிய அவசரநிலைப் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாக எச்சரித்தோம். உயிரிழப்புகள் மற்றும் காயங்களை 50 சதவிகிதம் குறைக்கும் லட்சியத்தையும் ஏற்றுக்கொண்டோம். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; உறுதிமொழிகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அதற்கேற்ற செயல்பாடுகள் இன்னும் போதுமான அளவில் இல்லை," என்று கவலை தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.