தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​தீக்கதிர் உலக செய்திகள்

27 Jul 2026, 9:15 pm
​​​​​​​தீக்கதிர்  உலக செய்திகள்

பேச்சுவார்த்தைக்கான சூழலை அமெரிக்கா அழிக்கிறது : ஈரான்

எந்தவொரு பேச்சுவார்த்தையும் துவங்க வேண்டுமெ னில் அதற்கான “சரியான சூழல்” உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அமெ ரிக்கா அந்தச் சூழலை அழித்து விட்டது. இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளை யும் அமெரிக்கா மீறிவிட்டது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர் பாளர் இஸ்மாயில் பகாயி குற்றம்சாட்டியுள்ளார். தற்போது எங்களின் முதன்மையான கவனம், எங்கள் நாட்டின் இறை யாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதுமே என கூறினார்.

சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் சவூதி எண்ணெய்

சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி நெருக்க டியை எதிர்கொண்டுள்ளது. ஈரான் மீதான அமெ ரிக்காவின் தாக்குதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கட லில் உள்ள பாப் அல்- மண்டப் நீரிணை இரண் டும் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் ஹவுதி படைகள் கட்டுக் குள் கொண்டுவந்துள்ளன. இதனால் சவூதி எண்ணெய் கப்பல்கள் நீண்ட மற்றும் அதிக செலவு கொண்ட சூயஸ் கால்வாய் வழியாக, ஆப்பிரிக்காவைச் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. வரும் நாட்க ளில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை உயரக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மீதான வரி : அமெரிக்காவுக்கு பாதிப்பு

பிரேசில் மீது டிரம்ப் விதித்துள்ள வரி அமெரிக்கா வுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரேசில் ஜனாதிபதி லூலா கூறியுள்ளார். பிரேசில் மீது ஏற்கெ னவே 25 சதவிகித வரி உள்ள நிலையில் அமெ ரிக்கா 12.5 சதவிகித வரி விதித்து 37.5 சதவிகித மாக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடி யாக பிரேசில் மீது தான் அமெரிக்கா அதிக வரி விதிக்கிறது.தற்போ தைய வரியால் பிரேசில் பொருட்களை நம்பி இருக்கும் அமெரிக்க தொழில்துறை களை கடுமையாக பாதித்து அந்நாட்டில் உணவு, கால ணிகள், ஜவுளிகள், வாகன உதிரிபாகங்கள் விலையை உயர்த்தி நுகர்வோரை பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.

தீவிரமடையும் காட்டுத்தீ : பிரான்சில் அவசரக் கூட்டம்

பிரான்சில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க அந்நாட்டு ஜனாதிபதி மக்ரோன் அமைச்சரவை கூட்டம் நடத்தியுள்ளார். ஐரோப்பாவில் வீசி வரும் வெப்ப அலை கார ணமாக ஸ்பெயின், பிரா ன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் காட்டுத் தீ ஏற் பட்டுள்ளது. மற்றொரு வெப்ப அலை பிரான் ஸைத் தாக்கும் என எச்ச ரிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரக் கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெ யினில் சுமார் 3,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உக்ரைன் தாக்குதல் : ரஷ்யாவில் இருவர் படுகொலை

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் படுகொலையாகியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை ரஷ்யா மீது நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி உக் ரைன் தாக்கியுள்ளது. ஆத ரவற்றோர் இல்லம் உட்பட பல கட்டடங்கள் தீக்கிரை யாகின இருவர் கொலை யாகியுள்ளனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையம் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி யதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரி வித்துள்ளார். இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் சில சேமிப்பு கிடங்குகள் கடும் சேதமடைந்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.