தீக்கதிர் உலக செய்திகள்
6 Aug 2026, 10:00 pm

பாகிஸ்தான் தலைவர்கள் சவூதி பயணம்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி அசிம் முனீர் சவூதி அரேபியா சென்றுள்ளனர். ஆகஸ்ட் 6-8 ஆகிய இரு நாட்கள் அந்நாட்டின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அமெரிக்கா, ஈரானுக்கு இடையே போர் சூழல் அதிகரித்துள்ள நிலையில் மத்தியஸ்தம் செய்யக்கூடிய நாடான பாகிஸ்தானின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்த பயணமானது தற்போதைய நெருக்கடிகளைத் தாண்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி தெரிவித்துள்ளார்.

பலத்த மழை,நிலச்சரிவு: பிலிப்பைன்ஸில் 4 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் கடந்த நான்கு நாட்களாகக் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் வட பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பசிபிக் சூறாவளியை எதிர்கொள்ளும் முதல் முக்கிய நாடாக பிலிப்பைன்ஸ் உள்ளது. இந்நாடு ஆண்டுதோறும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளால் தாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் மீட்பு

நைஜீரியாவில் கடத்தல்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நைஜீரியாவின் மத்திய மற்றும் வடக்குப்பகுதிகளில் அரசின் நிர்வாகம் முறையாக செயல்படுவதில்லை. இச்சூழலில் அப்பகுதிகளில் பணத்திற்காக ஆட்களைக் கடத்தும் குற்றக் கும்பல்கள், பயங்கரவாத அமைப்புகள், ஆயுதம் ஏந்திய கொள்ளைக்கும்பல்கள் அச்சுறுத்தல் பெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது. கடத்தப்பட்டவர்களை ஒரே நாளில் அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கருத்துக்களை கேட்கத் துணிவில்லாத நிலையில் கென்ய அரசுபயங்கரவாதத் தடுப்பு சட்டம் மூலமாக ஒடுக்கப்படும் ஜனநாயகக் குரல்கள்

சியாயா,ஆக.6-கென்யாவின் சியாயா மாவட்டத்தில்அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதிமக்கள் சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை கேட்பதற்கு மாறாகபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டி வருகிறது அந்நாட்டு அரசு.இந்த நடவடிக்கைக்கு மக்களின் குரலைநசுக்கும் ஒடுக்குமுறை என மனித உரிமைஅமைப்புகளும், முற்போக்கு இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.கென்யாவின் முதல் வணிகரீதியான அணுமின் நிலையத்தை ஏற்கெனவே கடுமையான சூழலியல் நெருக்கடியில் உள்ள விக்டோரியா ஏரிக்கரையில் அமைந்துள்ள சியாயாமாவட்டத்தின் மத்திய சக்வா (CentralSakwa) பகுதியில் சுமார் 36,778 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

விக்டோரியா ஏரி என்பது பல லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருப்பதுடன், கென்யா, உகாண்டா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியமான நன்னீர்ஆதாரமாகவும், நைல் நதிப்படுகையின்முக்கிய ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கிறது.எனவே, இந்தப் பகுதியில் உருவாக்கப்படும் எந்தவொரு பெரிய தொழிற்துறை திட்டமும்எல்லை தாண்டிய சர்வதேச தாக்கத்தைஏற்படுத்தும் என்பதால், அண்டை நாடுகளுடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிவதற்கு முறையான கருத்துக்கேட்புக் கூட்டங்களையோ அல்லதுவெளிப்படையான ஆலோசனைகளையோ அரசு நடத்தவில்லை. மேலும், இத்திட்டத்தால் விக்டோரியா ஏரியை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் எதிர்காலம், சுற்றுச்சூழல்பாதுகாப்பு மற்றும் ஆபத்துகள் குறித்தகேள்விகளுக்கு அரசு சரியான பதிலளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றது. போராட்டத்தை ஒருங்கிணைக்கும் முக்கிய தலைவர்கள் சிலரை கைது செய்துள்ளதுடன் ஒருவரை சுட்டுக்கொலை செய்துள்ளது அரசு. அரசு அமைப்பான ‘அணுசக்தி மற்றும் மின்சார மேம்பாட்டு ஆணையம்’ (NuPEA) நடத்திய கருத்துக்கேட்புக்கூட்டங்கள் அனைத்தும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளை நியாயப்படுத்துவதற்காகவே நடத்தப்பட்டனவேதவிர, மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமையவில்லை என்று பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாறாக அவர்களின் எதிர்ப்புக் குரலை முடக்குவதற்காகவே அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கென்யா அரசு நவ தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாகஅமல்படுத்தி வருகிறது. இதனால் அந்நாடுகளில் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களையும் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர்.

திட்டம் பற்றிய முக்கியமான ஆவணங்களைஅரசு வெளியிடாமல் மறைப்பதே இந்த சர்ச்சையின் முதன்மை காரணமாகவும் உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் நில அதிர்வு ஆபத்து தொடர்பான ஆவணங்கள் இதுவரைபொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை.

இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் கென்யா அரசியலமைப்பின் 35-வது பிரிவைநேரடியாக மீறும் செயலாகும். கிழக்கு ஆப்பிரிக்க பிளவு மண்டலத்தின் (East African Rift System) நில அதிர்வுத் தன்மை, எரிமலை வெடிக்கும் ஆபத்து மற்றும் ஏரியில் சுனாமிஏற்படுவதற்கானசாத்தியக்கூறுகள் காரணமாக விக்டோரியா ஏரிப் பகுதி அணுமின் நிலையம் அமைக்கஉகந்தது அல்ல என அந்நாட்டு அரசு விஞ்ஞானிகள் ஏற்கெனவே தெளிவாகக் கூறியுள்ளனர்.இந்நிலையில் ‘அரசியல் அழுத்தங்கள்’ காரணமாகத்தான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என ஒரு விஞ்ஞானி ஒப்புக்கொண்டுள்ளார்.