தீக்கதிர் உலக செய்திகள்
29 Jul 2026, 10:46 pm

ஜப்பான் நிலநடுக்கம் : 13 பேர் பலி

ஜப்பானின் தென்மேற்குத் தீவான கியூசுவில் உள்ள குமாமொட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.மேலும் நிலநடுக்கத்திற்கு பின்பு ஏற்படும் தொடர் நில அதிவுகள் வரும் நாட்களில் தொடரக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பல கட்டடங்கள் இடிந்துள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளாரா என தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

காகிதமில்லா சுங்க முறை இலங்கையில் அறிமுகம்

காகிதமில்லா சுங்க செயலாக்க முறையை அக்டோபர் 1 க்குள் இலங்கை அறிமுகப்படுத்தும் என்று அந்நாட்டு ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமணநாயக்க தெரிவித்துள்ளார். பொதுச் சேவைகளை நவீனமயமாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களில் அதன் பிறகு செய்யப்படும் மாற்றங்களை டிஜிட்டல் முறையில் கண்டறிய முடியும் என்பதால், மோசடி மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜோர்டானில் அமெரிக்க தளம் : ஈரான் தாக்குதல்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமான தளம் மற்றும் மத்திய கட்டளை மையம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறி சென்றதற்காக மூன்று எண்ணெய் கப்பல்களையும் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் தொடர்ச்சியான “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு” பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஈரானின் செபா நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

ஜெலென்ஸ்கி - டிரம்ப் சந்திப்பு

பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைத் தாங்களே சொந்தமாக உற்பத்தி செய்வதற்கான உரிமைகளைப் பெற உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த கோரிக்கை குறித்து பேசுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்தார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தேக்கமடைந்து உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில்இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

சீனக் கப்பல்களுக்கு செங்கடலில் பாதுகாப்பு

சவூதி அரேபிய துறைமுகங்களுக்கான போக்குவரத்தைத் தடை செய்வதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் செங்கடலின் பாப் எல்-மண்டேப் பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பிரச்சனை சீன கப்பல்களுக்கு இல்லை என கூறப்படுகிறது. தங்கள் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்காக சீனா ஹவுதி அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனை மூத்த ஈரான் நாட்டு அதிகாரிகள் உட்பட சிலர் இத்தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பொருளாதார கொள்கையால் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ

பாரீஸ், ஜூலை 29- ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடு களில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்கடங்கா மல் பரவி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஐரோப்பா வின் பொருளாதார கொள்கையே அதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தான் ஐரோப்பாவில் ஜூலை 28 முதல் மீண்டும் ஒரு அதீத வெப்ப அலை துவங்க உள்ளது. தற் போது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ யைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து சர்வதேச அமைப்புகளும் தொ ழிற்சங்கங்களும் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளன. காட்டுத்தீ மட்டுமல்லாமல், புயல்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளும் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரு கின்றன.

இதனை எதிர்கொள்ள அனை த்து நாடுகளும் தயாராக வேண்டும் என அவை எச்சரித்துள்ளன. ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (ETUC) மற்றும் ஐரோப் பியப் பொதுச் சேவைகள் சங்கம் (EPSU) கடந்த ஆண்டு எச்சரித்ததாவது, 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடை யில் காட்டுத்தீயால் எரிந்த மொத்தப் பரப்பளவு 10 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.

ஆனால் அத்தீயை கட்டுப் படுத்தும் பணியை செய்ய வேண்டிய பிர தான துறையான தீயணைப்புத் துறை க்கு பட்ஜெட்டில் போதிய அளவு பணம் ஒதுக்கவில்லை.வெறும் 0.5 என்ற அளவி லேயே தேங்கி நிற்கிறது என கூறின.

ஐரோப்பிய ஒன்றியம் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அத்தியாவசிய சேவைகளுக்கான நிதிகளை ஒதுக்கா மல் வெட்டியுள்ளது. குறிப்பாக தீயணை ப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் காலிப்பணியிடங்கள் போதிய அளவு நிரப்பப்படாமல் உள்ளன.

இது பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட பிரதான பணிகளுக்கு போதிய வீரர்கள் இன்றி நெருக்கடி மேலும் தொடர வழி வகுக்கின்றது. காட்டுத்தீ காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள சைப்ரஸ், போர்ச்சுக்கல் மற்றும் குரோஷியா போன்ற நாடுகள்கூட போதிய நிதி ஒதுக்க வில்லை. மாறாக நிதி வெட்டுவைத்து அல்லது போதிய அளவு ஒதுக்காமல் தவிர்ப்பது என்ற நடைமுறையை தான் பின்பற்றியுள்ளன.

இன்னும் சொல்லப் போனால் அந்நாடுகளின் தீயணைப்பு துறையில் 2024 ஆம் ஆண்டில் இருந்து 6%, 4% மற்றும் 3% பணியா ளர் குறைக்கப்பட்டுள்ளனர். 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பாவில் தீயணைப்பு துறையில் அதிகளவிலான காலிப் பணி யிடங்களை நிரப்பாத நாடு பிரான்ஸ் தான் என்று ஐரோப்பியப் பொதுச் சேவை கள் சங்கம் எச்சரித்திருந்தது. தீயணை ப்புத் துறைக்கு அவசியமான மற்ற சேவைகளிலும் பிரான்ஸ் அரசு பணியாளர்களை குறைத்தது.

தேசிய வனவியல் அலுவலகத்தின் (ONF) ஊழி யர்களின் எண்ணிக்கை 40 ஆண்டுக ளில் 15,000-த்திலிருந்து 8,000 ஆகக் குறைந்துள்ளது. அதேசமயம், மீட்டியோ-பிரான்ஸ் (Meteo-France) அமைப்பு 15 ஆண்டுகளில் தனது பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கை குறைத்துள்ளது.

இவ்வாறு ஆட்குறைப்பு ஒரு புறம் இருக்க மறுபுறம் தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணியில் பயன்படுத்தும் உபகரணங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. பிரான்ஸ் நாட்டில் கூட பழைய உபகரணங்கள் மற்றும் உபகரண பற்றாக் குறை இருப்பதாகவும் இவை தான் தற்போதைய காட்டுத்தீ நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

காட்டுத்தீயை கட்டுப் படுத்த பிரதானத் தேவை தண்ணீர் விமானங்களாகும். இவை பிரான்சில் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அந்நாட்டு ஜனாதிபதி மக்ரோன் ராணுவ பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியுள்ளார்.

ஆனால் பிரான்ஸில் இன்னும் காட்டுத் தீயை அணைக்க போதுமான தண்ணீர் விமானங்கள் இல்லை. உலகிலேயே சிறந்த போர் விமானத்தை எப்படி உரு வாக்குவது என்பது பிரான்ஸ் அரசுக்குத் தெரியும், ஆனால் காட்டுத்தீயை அணைக்க ஒரு விமானத்தை அவர்க ளால் உருவாக்க முடியவில்லை.

பிரான்ஸ் அரசின் நிதி வெட்டுக்களே இத்தகைய மோசமான நெருக்கடிக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ லுக்கும் காரணம் என இடதுசாரி கட்சி யான ‘லா பிரான்ஸ் இன்சௌமைஸ்’ கடுமையாக விமர்சித்துள்ளது.