தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

18 Nov 2026, 9:37 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

சூடானில் டிரோன் தாக்குதலால் அதிக மக்கள் படுகொலை

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ஜனவரி முதல் அக்டோபர் மாத இறுதி வரையிலான காலகட்டத்தில் 2,230 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு அதாவது 1,630-க்கும் மேற்பட்டோர் டிரோன் தாக்குதல்களால் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் மற்ற போர் உத்திகள் மற்றும் ஆயுதங்களை விட டிரோன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு அதிக மக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

ஹைட்டி வன்முறை : 4,595 பேர் பலி

ஹைட்டியில் ஜனவரி முதல் அக்டோபர் 31 வரையிலான 10 மாதங்களில் நடைபெற்ற ஆயுத வன்முறைகளில் 4,595 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2,050 பேர் படுகாய

மடைந்துள்ளனர் என்று ஐ.நா அவையின் மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் பொதுமக்களை தாக்குவது, ஆட்கடத்தல்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கட்டாயப்படுத்தி தங்களது கும்பல்களில் சேர்ப்பது மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஏமனில் 10 மாவட்டங்களைக் கைப்பற்றியதாக ஹவுதி அறிவிப்பு

ஏமனில் உள்ள ஹவுதி ஆயுதக்குழு ஏமன் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரில் அந்நாட்டின் இரண்டு மாகாணங்களில் சுமார் 7,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட10 மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளதாக ஹவுதிக் குழு அறிவித்துள்ளது. மேலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு புதிய சபாநாயகர் தேர்வு

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மதன் கஹானா செவ்வாய்க்கிழமை இரவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் நேதன்யாகுவின் தீவிர எதிர்ப்பாளராவார் புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்கட்சி தலைவராக உள்ள காடி ஐசன்கோட்டின் ‘யஷார்’ கட்சியைச் சேர்ந்த மதன் கஹானா, நேதன்யாகுவின் ‘லிக்குட்’ கட்சியைச் சேர்ந்த ஓபிர் காட்ஸை 66-க்கு 52 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் நேதன்யாகுவின் கூட்டாளியான அமீர் ஓஹானாவுக்குப் பதிலாக அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஊதிய உயர்வு கோரி வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

டாக்கா,நவ.18-ஈடுபட்டனர் ஊதிய உயர்வு கோரிஆடைத்தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஊதிய உயர்வுதொடர்பாக நடைபெற இருந்த முக்கியக் கூட்டம் ஒன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை போராட்டங்களில் ஈடுபட்டனர். நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதால் பெரும் கலவரம் உருவாகியுள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடைஏற்றுமதி நாடாக வங்கதேசம்உள்ளது. உலகின் முன்னணிஆடை விற்பனை நிறுவனங்களுக்கு வங்கதேசத்திலிருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 38 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் இத்துறையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மிகக்கடுமையான விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு ஏற்ப குறைந்தபட்ச மாத ஊதியத்தை 12,500டாக்காவிலிருந்து 30,000டாக்காவாக (9,369 ரூபாயிலிருந்து, 22,485 ரூபாயாக) உயர்த்தக் கோரி கடந்த மாதம் முதல் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், ஊதிய நிர்ணய வாரியக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவிருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வர இருந்த பிரதிநிதி ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுகாரணமாகக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று காலை 9 மணியளவில் காஜிபூரில் உள்ள டாக்கா - மைமென்சிங் பிரதான நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல பகுதகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தொடுத்த நிலையில் பதிலுக்கு போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது கற்களை வீசியும், வாகனங்களுக்குத் தீ வைத்தும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

500 தொழிற்சாலைகள் மூடல்தொடர் போராட்டங்கள் காரணமாக நாட்டிலுள்ள 4,500 ஆடைத்தொழிற்சாலைகளில் சுமார் 500தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, காஜிபூர் பகுதியில் மட்டும் போராட்டம் காரணமாக குறைந்தது 30 ஆடைத் தொழிற்சாலைகளுக்குப் பொது விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுத்தொழிலாளர் சட்டத்தின் ‘வேலை இல்லை என்றால் ஊதியம் இல்லை’ என்ற விதியின் கீழ் தொழிற்சாலைஉரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களை பழி வாங்கி வருகின்றனர்.இதனிடையே, அடுத்த ஊதியவாரியக் கூட்டம் நவம்பர் 23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.