தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

7 Aug 2026, 10:19 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

வெனிசுலாவில் சிதிலமடைந்த வீடுகள் : சீரமைப்பு பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 13,000-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக, தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்குச் சீரமைக்கப்பட்ட முதல் பகுதி (60 மாடிக்கட்டிடம்) குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும்செயல்படுத்தப்பட்டு வரும் இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் சுமார் 66,000 மக்கள் பயனடைவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்கள் மீண்டும் தங்களது நிரந்தர வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

அமெரிக்காவில் காட்டுத் தீ : உச்சபட்ச அவசரநிலை எச்சரிக்கை

அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு மிகப் பெரிய அளவிலான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த ஆண்டு இதுவரை 45,184 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் சுமார் 51.89 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளன.காட்டுத்தீதீவிரமடைந்துள்ளதை அடுத்து, அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்காக உச்சபட்ச அளவான ‘லெவல் 5’ எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4 அன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 97 புதிய காட்டுத்தீசம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறைகளில் மீண்டும் பதற்றம்

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள மிக முக்கிய அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலை உட்பட மூன்றுசிறைகளில் பதற்றம் உருவாகியுள்ளது. சிறைக்கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதில் ஏற்பட்ட மோதலில் 3கைதிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, அம்மூன்றுசிறைச்சாலைகளிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்திலிருந்து இரு வேறுசிறைகளில் நடந்த கலவரங்களில் 10 காவலர்களும் 23 கைதிகளும் உயிரிழந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இலங்கைச் சிறைகளில் அடுத்தடுத்து மோதல்கள், தப்பிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சிறைகளின் கொள்ளளவை விட கைதிகளின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகமாக உள்ளதே இந்தத் தொடர் கலவரங்களுக்கும் காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1000 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக இருக்கும் என ஆய்வாளர் எச்சரிக்கை ‘சூப்பர் எல் நினோ’

வாஷிங்டன்,ஆக.7-காலநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வெப்பம் பல நூற்றாண்டுகளில் மனிதகுலம் சந்தித்திராத மிகக் கடுமையான காலநிலை நிகழ்வாக மாறக்கூடும் என்று அமெரிக்க வானிலைஆய்வாளர் ரியான் மாவி எச்சரித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வானிலை மாற்றம் அதிவேகமாக வலுவடைந்து வருகிறது. இது, கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடிய பேரழிவோடு ஒப்பிடும் வகையில் அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த சில வாரங்களாக மிக அதிகமான வெப்பம் உலக நாடுகளில்பதிவாகி வருகின்ற நிலையில் தான் ரியான் மாவி இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

1877 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ தாக்கத்தின் காரணமாக உலகளவில் சுமார் 5கோடி மக்கள் (3-4 சதவிகிதம்) பலியாகினர். தற்போது வரவிருக்கும் எல் நினோவானது “காட்ஜில்லா எல் நினோ”எனவும் குறிப்பிடப்படுகின்றது. இக்காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய வெப்ப அலைகள், வறட்சி மற்றும் நோய்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் மனிதப்பேரழிவுகளும் 1877 ஆம் ஆண்டு இந்த உலகம் சந்தித்ததை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த ‘எல் நினோ’ ஒருவேளை 500 முதல் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலிமையானதாக இருக்கும்.மேலும் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதகுலம் சந்தித்த மிகக் கடுமையான காலநிலைநிகழ்வாக இது இருக்கக்கூடும் என்றும் ரியான் மாவி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், எல் நினோ இப்போது உறுதியாக உருவெடுத்து தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின்வெப்பநிலை சராசரியை விட 1.94 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதம் கடைசி இரு வாரங்களில் அரை டிகிரி வரைதிடீரென அதிகரித்துள்ளது. எல் நினோவிற்கான தொடக்க நிலை 0.8 டிகிரிசெல்ஸியஸ் ஆகும். இந்த நிகழ்வு வெப்பநிலையின் அளவானது மிக பெரும் உச்சத்தை எட்டலாம் அல்லது அதையும் தாண்டலாம் என்ற அச்சத்தைஉருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும்வளிமண்டல கண்காணிப்பு அமைப்பு , அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே ஒரு “மிக வலுவான” எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 81 சதவீதம்உள்ளது என கணித்துள்ளது.

1877-78 ஆம் ஆண்டு உருவான எல் நினோ, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பேரழிவுகரமான காலநிலை நிகழ்வுகளின் போது உருவானது. ‘ஜர்னல் ஆஃப் க்ளைமேட்’ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஒரே காலக்கட்டத்தில்ஏற்பட்ட வறட்சியின் காணமாக உலகம் முழுவதும் பரவலாக விவசாயம் பேரழிவை சந்தித்து பயிர் இழப்பை ஏற்படுத்தியது.இக்காலக்கட்டத்தில் உலகளவில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

பருவமழையை நம்பியிருக்கும் ஆசிய நாடுகள் 800 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான வறட்சியை அந்தகாலக்கட்டத்தில் சந்தித்தன. இச்சமயத்தில் தான் மெட்ராஸ் பஞ்சமும் ஏற்பட்டது. இதே நேரத்தில் எல் நினோ மட்டும் தான் முழு பேரழிவுக்கும் காரணம் என முடித்து விட முடியாது. காலனித்துவக் கொள்கை,அரசுகளின்போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாதது, பணப்பயிர்களை அளவுக்கு மீறிஊக்குவித்தது வேலையின்மை வறுமை ஆகியவையும் இப்பஞ்சத்தால் ஏற்பட்ட தீவிர விளைவுகளுக்குமுக்கியகாரணமாகவும் கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.