தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

28 Jul 2026, 10:07 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

பிரிட்டன் புதிய பிரதமர் : உக்ரைன் போருக்கு உதவி

பிரிட்டன் புதிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு உதவி செய்துள்ளார். போர் தொடர்பாக டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெலென்ஸ்கி அமெரிக்கா செல்கிறார். அதற்கு முன்னதாக பிரிட்டன் கடற்படை தளத்தில் ஆண்டி பர்ஹாமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நாங்கள் உக்ரைனுடன் 100 சதவீதம் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் உங்களுடன் 100 சதவீதம் இருக்கிறேன், என்று ஜெலென்ஸ்கியிடம் பர்ஹாம் கூறினார். மேலும் உக்ரைனின் போருக்கு உதவும் வகையில் டிரோன் ஜாமிங் தொழில்நுட்பத்தை பிரிட்டன் வழங்குவதாக பர்ஹாம் அறிவித்துள்ளார்.

லெபனானின் மீதான போர் : இஸ்ரேலின் போர்க்குற்றம்

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் மிக அதிகளவிலான பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவை போர் குற்றங்களாக மாறக்கூடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அறிவித்துள்ளார். சர்வதேச சட்டத்தை மீறிய பல சம்பவங்க ளை தாங்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் சில நிகழ்வுகள் போர் குற்றங்களாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக மக்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் கள் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் அதிக மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அரசு சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் சிலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் சனாய் டகைச்சி தெரிவித்துள்ளார். நிலநடுக்கம் காரணமாக அம்மாகாணத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் அலைகள் அதிகபட்சமாக ஒரு மீட்டர் உயரம் வரை எழும். கடலோரப் பகுதி மக்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லவும்,அரசு காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எபோலா தொற்று பரவல் : உகாண்டாவில் முடிவுக்கு வந்தது

உகாண்டாவில் எபோலா வைரஸ் தோற்று பரவல் முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு அந்நாட்டில் முதல் முறையாக எபோலா தொற்று ஏற்பட்டது. பிறகு பல முறை அத்தொற்று பரவல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். 2026 இல் காங்கோவில் ஏற்பட்ட தொற்று மே மாதம் உகாண்டாவிற்கும் பரவியது. 20 பேருக்குப் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வைரஸ் தொற்றால் இருவர் பலியாகினர். உயிரிழந்த இருவரும் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நீதிமன்றத்திலிருந்து விலகும் சாட் அரசு

சாட் அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்திறன் “கட்டுப்படுத்தப்பட்டதாகவும் சீரற்றதாகவும்” உள்ளது எனவும் அவ்வமைப்பு ஆப்பிரிக்க நாடுகளையே குற்றவாளிகளாக காட்டுகிறது என்றும் சாட் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் பிரதமரை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதால் நீதிமன்றத்திற்கு எதிராக பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாட் முடிவுக்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.