தீக்கதிர் உலக செய்திகள்
24 Jul 2026, 9:31 pm

இயற்கை வளத்தின் பலன்கள் மக்களுக்கு செல்ல வேண்டும்

இயற்கை வளங்களின் பலன்களும் அதனால் கிடைக் கும் லாபமும் மக்களுக்கு செல்ல வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோ ணியோ குட்டரெஸ் வலியுறுத்தி யுள்ளார். ஐ.நா பாதுகாப்பு அவை விவாதத்தில் பேசிய அவர் இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகளில் இருந்து வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் லாபம் வேறு இடங்களுக்குச் சென்று சேர்வதும், உள்ளூர் மக்கள் வறுமை, சுற்றுச்சூழல், சமூக-பொருளாதாரப் பாதிப்புகளுடன் தவிக்கும் நிலையும் உள்ளது. இந்த பழைய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் காலரா பரவல்: 200 பேர் பலி

நைஜீரியாவில் காலரா நோய்த்தொற்று கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் சுமார் 200 பேர் உயிரிழந்துள் ளதாக ‘மருத்துவர் கள் எல்லைகள் அற்ற அமைப்பு’ தெரிவித்துள்ளது. மேலும் இவ்வமைப்பு 35,500-க்கும்மேற் பட்ட காலரா தொற்று பாதிப்புகள் பதிவா கியுள்ளன காலரா அறிகுறிகளுடன்வந்த 24,000-க் கும் மேற்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளதா கத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்த மான குடிநீர், முறையான சுகாதார சேவைகள் பற்றாக் குறையே நோய் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவுவதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

காசாவில் மோசமடையும் நிலைமை: கவலை தெரிவித்த பிரிட்டன்

காசாவில் மோசமடைந்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்து பிரிட்டன் அரசு கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாட்டின் (IPC) அறிக்கையில் காசா வில் நிலைமைகள் மேலும் மோசமடை யும் என்று எச்சரிக்கை விடப்பட்டதைத் தொ டர்ந்து இந்த கவலையை தெரிவித்துள்ளது. காசாவில் 30 சதவீதத்திற்கும் குறைவான பகுதிக்குள் மக்கள் தொகையில் சுமார் 90சதவீதத்தினர் முடங்கியிருக்கும் நிலையில், 12 லட்சம் மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது“முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பிரிட்டன் கூறியுள்ளது.

ரஷ்ய நிறுவனத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான “ரஷ்யாவின் அமேசான்” என்று அழைக்கப்படும் ‘வைல்டுபெர்ரீஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கு மீது உக்ரைன் தாக்கு தல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் டிரோன்கள் மூலமாக ரஷ்யாவின் எரிசக்தி, ராணுவம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது உக் ரைன் சமீப வாரங்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி யுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் மீது மூன் றாவது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஸ்பெயினில் பயங்கர காட்டுத்தீ: 3,09,000 ஏக்கர் நாசம்

ஸ்பெயினில் காட்டுத்தீ மிகத்தீவிரமாகியுள்ளது. இதனால் மாட்ரிட் பிராந்தியத்திலும் அவிலா மாகாணத்திலும் ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள் ளது. ஒரே நேரத்தில் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவியுள் ளது. மாட்ரிட்டின் பிராந்தியத்தில் மட்டும் 80,000 ஏக்கர் காடுகள் எரிந்து போயுள்ளன. ஐரோப்பிய காட்டுத் தீ தகவல் அமைப்பின் தகவல்படி, கடந்த ஆண்டு முழுவதும் ஸ்பெயினில் 9,71, 121 ஏக்கர்கள் எரிந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 3,09,000 ஏக்கர் எரிந்துள்ளது.