கல்லூரி விடுதி உணவில் புழுக்கள்
1 hour before

கல்லூரி விடுதி உணவில் புழுக்கள்

நாமக்கல், அக்.5-தனியார் கல்லூரி விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் இருப்பதாக கூறி, அவற்றை பாட்டிலில் கொண்டு வந்து நூதன முறையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று புகார் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்களிடம் விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப தரமான உணவு வழங்கப்படுவதில்லை.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் தொடர்ந்து காணப்படுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலும் ஏற்படுகிறது. இதையடுத்து அக்.2,3,4 ஆகிய தேதிகளில் பல்வேறு கல்லூரி விடுதிகளில் உணவில் காணப்பட்ட புழுக்கள், பூச்சிகளை சேகரிக்கப்பட்டு, இவற்றுக்கு “ஆயுள் தண்டனை” வழங்க வேண்டும்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, புழுக்களுடன் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிசார், செயலாளர் தங்கராஜ், மாவட்ட இணைச் செயலாளர் ராஜேஷ் குமார், தனியார் கல்லூரி மாணவர்கள் உபக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக புழுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்ற மாணவர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.