தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமூக மாற்றத்திற்காக எழுத முன்வருவோர் மக்களின் மொழியைப் பயில வேண்டும்! பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் வேண்டுகோள்!

yesterday
சமூக மாற்றத்திற்காக எழுத முன்வருவோர் மக்களின் மொழியைப் பயில வேண்டும்! பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் வேண்டுகோள்!

சமூக மாற்றத்திற்காக எழுத முன்வருவோர் மக்களின் மொழியைப் பயில வேண்டும்! பாராட்டு விழாவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் வேண்டுகோள்!

சென்னை, செப். 1 –சமூக மாற்றத்திற்காக எழுத முனையும் படைப்பாளிகள் மக்களுக்கான எளிய, பழகு தமிழில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச)மூத்த தலைவர் ச. தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.‘தமிழ்ச்சிறுகதைகளின் தடங்கள்’நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவரும், ‘செம்மலர்’இதழின் ஆசிரியருமான தமிழ்ச்செல்வ னுக்குப் பாராட்டு விழாவும், அவரது படைப்புகள் பற்றிய ஆய்வரங்கமும்கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. தமுஎகசமாநிலக் குழுவின் இந்த விழாவை, சங்கத்தின் வடசென்னை மாவட்டக் குழு நடத்திக் கொடுத்தது.

எளிய மக்களின் மொழியில் படைப்பாக்கங்கள்

விழாவின் நிறைவில் ஏற்புரையாற்றிய ச. தமிழ்ச்செல்வன், “மக்களுக்காகஎழுதுவதாகக் கூறிக்கொள்கிறோம்.எளிய மக்களின் விடுதலைக்காகவும்சமத்துவத்திற்காகவும் எழுதுவதாகவும் சொல்கிறோம். அந்த நோக்கத்தில் உண்மை இருக்கிறது. ஆனால்,நம் எழுத்தாக்கங்கள் பெரும்பாலும்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே வாசிக்கத்தக்க வையாக, எளிய மக்களைச் சென்றடையாதவையாகஇருக்கின்றன. இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அந்த மக்களின் மொழியில், அவர்கள் ரசித்துப் புரிந்து கொள்ளும் நடையில் எழுது வதற்குப் பயிற்சி பெற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

விழாவுக்குத் தலைமை தாங்கியதமுஎகச மாநிலத்தலைவர் மதுக்கூர்இராமலிங்கம், மக்களுக்காக எழுத முன்வருகிறவர்கள் மக்களோடு நின்றுஎழுதுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.வாழ்த்துரை வழங்கிய பொதுச்செயலாளர் களப்பிரன், விருது பெற்றபடைப்பாளிகளைப் பாராட்டுவது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல, விருது பெறக்கூடிய புதிய படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்காக வும்தான் என்று தெரிவித்தார்.பன்முகச் செயல்பாடுகளும் ஆய்வரங்கமும் சங்கத்தின் மாநிலப்பொருளாளர் சைதை ஜெ., செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு, சிங்காரவேலர் விருது பெற்ற ஆய்வாளர் பா.வீரமணி ஆகியோரும் ச.தமிழ்ச்செல்வனின் பன்முகச் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பேசினர்.

தமிழ்செல்வன் படைப்புகள் ஆய்வரங்கம்

முன்னதாக அவரது படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில் பண்பாட்டுத் தளம் சார்ந்த

எழுத்தாக்கங்கள் குறித்து தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி. சுகந்தி,புனைவு இலக்கியம் பற்றி தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் மணிமாறன், அஃறிணை / அபுனைவு

இலக்கியம் பற்றி மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்ச்செல்வனின் அனைத்துவகைப் படைப்புகளிலும் மக்கள்மீதான அக்கறையும் மார்க்சிய அடிப்படையும் இருப்பதை உரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.மாநிலக் குழு உறுப்பினர் ஆய்வாளர் அ.பகத்சிங், மாவட்டத் துணைத்தலைவர் தீபா ஜெயபாலன்,துணைச் செயலாளர் வெங்கட்ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தனர். கங்கு குழுவினரின் பாடல்களோடு தொடங்கிய விழாவில், மாவட்டச் செயலாளர் சி. விஜயன் வரவேற்றார்; செயற்குழு உறுப்பினர் தளவைராஜேந்திரன் நன்றி கூறினார். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் உள்பட பலரும் கலந்துகொண்டுவாழ்த்துத் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.