முந்தய பக்கம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகிறார்

2 hours before
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகிறார்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகிறார்

புதுதில்லி, ஜூலை 31 -சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுதில்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் ‘பிரிக்ஸ் உச்சி மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில்பங்கேற்பதற்காக ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகிறார்.

ஜி ஜின்பிங், இதற்கு முன்பு,

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருந் தார். அதன் பிறகு, இரு நாட்டு எல்லைப் பதற்றம் காரணமாக நீண்டநாட்களாக இருதரப்பு உறவுகளில் தேக்கம் நிலவிவந்தது. தற்போது, எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அண்மை யில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும்சீரமைப்பதில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும் இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram