‘1.27 கோடி இந்து வாக்காளர்கள்’ நீக்கப்பட்டதாகக் கூறியது எப்படி? - உ.பி. முதலமைச்சர்
22 Nov 2026, 9:14 pm

‘1.27 கோடி இந்து வாக்காளர்கள்’ நீக்கப்பட்டதாகக் கூறியது எப்படி? - உ.பி. முதலமைச்சர்

ஆதித்யநாத்திடம்தரவுகளைக் கோரிய‘எஸ்ஐஆர் சுதந்திர ஆணையம்’

புதுதில்லிவாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) குறித்து எழுந்து வரும் கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், அப்பணிகளைக் கண் காணிக்கவும் ‘அரசியலமைப்புக் கான வழக்கறிஞர்கள் சங்கம்’ எனும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமைப் பால் ‘எஸ்ஐஆர் சுதந்திர ஆணையம்’ அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகூர் இதன் தலைவராக உள் ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக், நீதிபதிகள் பதர் துரெஸ் அகமது, ரேகா ஷர்மா, அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப் பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

கடிதம்இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி

களுக்குப் பிறகு சுமார் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக அம்மாநில முதமைச்சர் ஆதித்யநாத் கூறியது எப் படி; இதற்கு ஆதாரமான தரவுகள் அல்லது ஆவணங்களை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் ‘எஸ்ஐஆர் சுதந்திர ஆணையம்’ கோரியுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆணையம் கூறியிருப்பதாவது,”உத்தரப்பிரதேசத்தில் 1.27 கோடி இந்துக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக ஊடகங்களில் வெளியான பொது அறிக்கை, எங்கள் ஆணையத்தின் எஸ்ஐஆர் முறைகேடு தொடர்பான ஆய்வு வரம் பிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. அதனால் இந்துக்கள் வாக்காளர் நீக்கங்களுக்கு ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் அல் லது உறுதியான தரவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வழங்குமாறு ஆணையம் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது. அந்த ஆவணங்களை முழுமையான சுயாட்சியுடனும், நடுநிலைமையுடனும் நாங்கள் ஆய்வு செய் வோம். மேலும், உத்தரப்பிரதேசத் தில் விரைவில் தேர்தல்கள் வரவிருப்பதாலும், லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட வாய்ப்புள்ளதாலும், இந்தவிவகாரத்தின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு பதிலளிப்பதில் தாமதம் செய்ய வேண்டாம்” என எஸ்ஐஆர் சுதந் திர ஆணையம் வலியுறுத்தியுள்ளது.