தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பதிலடி கொடுக்கும் இளைய சமுதாயம்

21 Jul 2026, 10:02 pm
பதிலடி கொடுக்கும் இளைய சமுதாயம்

பதிலடி கொடுக்கும் இளைய சமுதாயம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் த்துறையின் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தை நோக்கித் திரண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தில்லி காவல்துறையினர் நடத்தியுள்ள வன்முறை- வெறியாட்டம் வன்மையாக கண்டி க்கத்தக்கது. சமூக வலைதளங்களில் உருவான ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் மாணவர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பேரணியாகத் திரண்டனர். பலரும் தாங்கள் கடந்த காலத்தில் பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் என்றும், அரசின் அராஜகமான போக்காலும் வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் ஒட்டுமொத்த அதிருப்தியாலும் வீதிக்கு வந்து ள்ளதாகத் தெரிவித்திருப்பது கவனத்திற்குரியது.

ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறை யில் போராடியவர்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுவீச்சு, ஜனநாயகத்தின் மீதான படுகொலைத் தாக்குதலாகும். சிபிஎம் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோல் மார்க்கெட் பகுதிக்குள்ளும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள் ளன. ஆயிரக்கணக்கான காவல்துறையினரை மீறி இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் அருகில் உள்ள வாசல்களை அடைந்தனர். ஜே.பி. நட்டா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு சிஜேபி பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினாலும், மறுபுறம் காவல்துறை மூலம் கட்டவிழ்த்துவிடப் பட்ட அடக்குமுறை கோழைத்தனமானது.

வினாத்தாள் கசிவு மற்றும் தேசிய தேர்வு முகமையின் தோல்விகளை மூடிமறைக்க முய லும் மோடி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் செவிமடுக்க மறுக்கிறது. பல மாதங்களாகத் தொடரும் இந்த எதிர்ப்பலை களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முற்படா மல், காவல்துறையைக் கொண்டு ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

மோடி அரசின் இந்த அடக்குமுறைகள் மூலம் இளைஞர்களின் கொதிப்பையும் எதிர்ப்பையும் ஒருபோதும் ஒடுக்க முடியாது. தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், என்டிஏ கலைக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் நிபந்தனை யின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தனது கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இளைய தலைமுறையின் குரலை அடக்கு வதற்கு அரசாங்கம் கையாளும் ஒடுக்குமுறை உத்திகள் ஒருநாளும் பலனளிக்காது. கல்வித் துறையில் நிலவும் சீர்கேடுகளுக்கும், வேலை வாய்ப்பின்மை பெருக்கத்திற்கும் தீர்வு காணத் தவறிய ஆட்சியாளர்கள், மக்களின் நியாய மான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். அடக்குமுறைகள் மூலம் எதேச்சதி காரத்தை நிலைநாட்ட துடிக்கும் பாசிச சக்திகளுக்கு இளைய சமுதாயம் உரிய பதிலடியைத் தரும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.