districts

ஏப்.19 வாக்குப் பதிவு நாளன்று தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், ஏப்.16- நாடாளுமன்றத் தேர் தலையொட்டி ஏப்.19 வாக்குப் பதிவு நாளில், வர்த்தகம் மற்றும் பொது  நிறுவனங்கள் ஊழியர் களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க  வேண்டும் என நாகப்பட்டி னம் மாவட்ட தேர்தல் நடத் தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தி யுள்ளார்.  ஏப்.19 அன்று நடைபெற விருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் நூறு சத வீதம் வாக்களிக்கும் பொருட்டு, அனைத்து கடை கள், வர்த்தக நிறுவனங்கள்,  உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951,  பிரிவு 135 பி-ன் கீழ்,. அன்றைய தினம் சம்பளத்து டன் கூடிய பொது விடு முறை அளிக்கப்பட வேண் டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத  நிறுவனங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவிலான தொழி லாளர் துறையின் மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொ டர்பான புகார்களை தெரி விக்க, தொழிலாளர் உதவி ஆணை அமலாக்கம் - ம.குமார், அலைபேசி எண். 9442912527, நாகப்பட்டினம் தொழிலாளர் உதவி ஆய்வா ளர் இரா.உருத்திராபதி -  அலைபேசி எண். 63693 84512, முத்திரை ஆய்வாளர்  அ.சிவகாமி - அலைபேசி எண்.9965989101 ஆகியோ ரது எண்களில் புகார் தெரி விக்கலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரி வித்துள்ளார்.

;