districts

நூறு சதவீதம் வாக்களிப்போம்! கும்பகோணத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கும்பகோணம், ஏப்.16- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய்த் துறை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி , கிங்ஸ் ரோட்டரி சங்கம், காட் சிட்டி ரோட்டராக்ட் சங்கம் மற்றும்  அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து, மாபெரும்  வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கும்பகோ ணத்தில் நடத்தின. பேரணியை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சி யர் பூர்ணிமா, கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பாக விழிப்பு ணர்வு தொப்பிகள் வழங்கி, பேரணியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். கும்பகோணம் வட்டாட்சி யர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்தியன்  ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ, ரெட் கிராஸ் உறுப்பினர்கள், மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் கும்பகோணம் குழந்தைகள் வளர்ச்சி  திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் யூனிட் 1&2  கலந்து கொண்டனர். பேரணியானது, கும்பகோணம் மகாமக குளக்கரையில் துவங்கி, காந்தி பூங்காவில் நிறைவ டைந்தது. வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்குகள் செலுத்த வலியுறுத்தி பூங்காவில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். பேரணியில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

;