districts

img

போக்குவரத்துக்கு லாயக்கற்ற தாந்தாணி - எரிச்சி சாலை சீரமைக்கப்படுமா?

அறந்தாங்கி, ஏப்.26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் தாந்தாணியில் இருந்து எரிச்சி சிதம்பர விடுதி செல்லும் சாலை  குண்டும் குழியுமாக சேதமடைந்து இருப்பதால், விபத்து நிகழும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள இந்தச்  சாலையை செட்டிக்காடு, சிட்டாங்காடு, கரிசக்காடு, தொழுவங் காடு போன்ற கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி, தாந்தாணி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இருப்பதால் இந்த சாலையை பள்ளி மாணவ, மாணவி கள் அதிகளவில் பயன்படுத்துகிற நிலை உள்ளது. இதுகுறித்து தாந்தாணி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ய நாதன் கூறுகையில், “இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டு களுக்கு மேலாகி இருப்பதால், இப்பகுதியில் சிறிய மழை  பெய்தாலும் சாலையில் நீர் தேங்கி விபத்து நிகழ வழிவகுக் கிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பலமுறை  அரசுக்கு அனுப்பியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து,  விரைவில் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்” என்றார்  வேதனையுடன்.

;