districts

img

காலமானார்

மதுரை, பிப். 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ் அவர்களின் தாயார் அ. ஆவுடையம்மாள் செவ்வாய்க்கிழமையன்று காலை காலமானார்.  அவரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னருமான சு. வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா. நரசிம்மன், இரா. லெனின், எம். பாலசுப்பிர மணியம், வை.  ஸ்டாலின், ஜெ. லெனின் மற்றும் பகுதிக் குழு செயலாளர்கள்,வர்க்க,வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள்  அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி புதனன்று காலை 9 மணிக்கு பெத்தானியாபுரம் பாத்திமா நகர் ஆசைத்தம்பி வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

;