games

img

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா – அட்டவணை வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளதால், போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.  இதில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. போட்டிக்கான அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் புதன்கிழமை வெளியிட்டன.  

முதல் ஒருநாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதியும், 2ஆவது ஒருநாள் போட்டி ஜூலை 24 ஆம் தேதியும், 3ஆவது ஒருநாள் போட்டி ஜூலை 27 ஆம் தேதியும் குயின்ஸ் பார்க் ஓவர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல் டி20 போட்டி ஜூலை 29 ஆம் தேதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்திலும், 2 மற்றும் 3ஆவது டி20 போட்டிகள் ஆகஸ்ட் 1 மற்றும் 3 ஆம் தேதிகளில் வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ் மைதானத்திலும், 4 மற்றும் 5ஆவது போட்டிகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் புளோரிடாவில் உள்ள ப்ரொவார்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.  

புதன்கிழமை வெளியிடப்பட்ட போட்டிகளின் முழு பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்தை நடத்தும். 

;