headlines

img

வெறுப்பை விதைக்கும் செயல்...!

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதன் பின்னணி மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. கார ணம் தேசிய குடிமக்கள் பதிவேடு மட்டும் தனித்த தாக இல்லை. அதனுடன் இணைந்தே  குடியுரிமை திருத்த சட்ட முன்வடிவும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் நோக்கம்  ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தனிமைப் படுத்தி மதவெறியை கூர்மைப்படுத்தும் நடவடிக் கையாகவே இருக்கிறது. இது ஏதோ தற்செயலான நடவடிக்கையல்ல. தேசிய மக்கள் பதிவேடு என்பது குடியுரிமை சட்டம் மற்றும் விதிகளில்  திருத்தங்களை ஏற்படுத்தி 2003ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது துவங்கப்பட்டது. அதன் பின்னர் ஆதார் வந்த போது எல்லாவற்றிற்கும் இது ஒன்றே போதும் என தேசிய பதிவேடு திட்டம் கைவிடப்பட்டது.  ஆனால் எவ்வித தேவையும் இல்லாத நிலை யில் மீண்டும் தற்போது தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படுகிறது. இதன் நோக்கம் குடியுரிமை திருத்த சட்ட முன் வடிவை கொண்டு வருவதற் கான முன் ஏற்பாடே ஆகும். 

குடியுரிமை திருத்த சட்ட முன்வடிவில் பல ஆபத்தான விஷயங்கள் முன்வைக்கப்பட்டி ருக்கிறது. நம் நாட்டிலேயே பிறந்து பல தலை முறைகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு குடி யுரிமை மறுக்கும் வகையில் சட்டத்திருத்த முன் வடிவு இருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்திருக்கும், இந்துக்கள், ஜெயின் சமூகத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர் கள், பார்சிகள் அனைவரையும் ஏற்று அவர்க ளுக்கு குடியுரிமை வழங்கவும் வகை செய்யப் பட்டிருக்கிறது. இவ்வாறு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை மறுக்கும் நடவடிக்கை  நமது  அரசியல மைப்பு சட்டத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல் ஆகும். சாதி, மத, இன, மொழி, ஆண் -பெண் வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சாசனம் குடியுரிமை யும்; அடிப்படை உரிமைகளையும் வழங்குகிறது. அதனை குழிதோண்டி புதைக்கும் செயலில் மோடி அரசு இறங்கியிருக்கிறது. இது முழுக்க ஆர்எஸ்எஸ்  திட்டத்தின் படி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த மதவெறி தீயை பற்ற வைப்ப தற்கான ஒரு நடவடிக்கையே ஆகும்.

அசாமில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடி மக்கள் பதிவேடு என்பது அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் அதனை இப்போது நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என  அமித்ஷா கூறுகிறார். மேலும் பாஜக ஆளும் சில மாநிலங்களை  மக்களை அடைத்து வைக்கும் மையங்களாக பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களை கட்டுமாறு மோடி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப் பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.   இதனை எதிர்த்து முறியடித்திட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் உயிர்நாடியான வேற்றுமையில் ஒற்றுமை காணும் மாண்பை கட்டி காக்க முடியும்.

;