headlines

img

மோடி ரயில் தடம் புரள்வது உறுதி

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திரு விழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கி விட்டது. வெள்ளியன்று முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள் ளது. தமிழகம் உள்பட  17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 

தமிழகத்தில்  உள்ள 39 மக்களவைத் தொகுதி களில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளை தவிர மற்ற 36 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவை காணமுடிந்தது.  மாநிலம் முழு வதும் சுமார் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் சிறிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந் துள்ளன. மணிப்பூரில் ஒரு வாக்குச்சாவடி யில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மற்றொரு தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.  துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டி ருந்த போதிலும் ஆயுதம் தாங்கிய நபர்கள் தைரியமாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார் கள் என்றால் பாஜக ஆளும் அம்மாநிலத்தில் அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள் ளது. எனவே தேர்தல் ஆணையம் இவற்றை யெல்லாம் கவனத்தில் கொண்டு மீதமுள்ள 6 கட்டத் தேர்தல்களை அமைதியாகவும் பாதுகாப் புடனும் நடத்த ஏற்பாடுகள் செய்யவேண்டும். 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகு திகளில் வெற்றி பெறும் என்று  பிரதமர் மோடி பகல்கனவு காண்கிறார். கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளைக் கைப்பற்றி யது.  ஆனால் இந்த முறை பாஜக மிகப்பெரிய  தோல்வியை சந்திக்கப்போவது நிச்சயம். முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 102 தொகுதிக ளில் இருந்து வரும் தகவல்கள் பாஜக ரயில் தடம் புரளப் போவதை உறுதிப்படுத்துகின்றன.  கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் துன்பங்களை அனுபவித்த இல்லத்தரசிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென் றுள்ளனர். ஒன்றிய அரசின் மீதான கோபத்தின் வெளிப்பாடாகவே இதை கருதவேண்டியுள்ளது. 

தமிழகம் மட்டுமல்ல, முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களிலும்  மாற்றம் வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளதே அதற்கு சாட்சி.  மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப நாடு  தயாராகி விட்டதையே இது காட்டுகிறது. எனவே இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத் தும் அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் மேலும் தீவிரமாக களப் பணியாற்றி பாஜக வீழ்ச்சியை 100 விழுக்காடு உறுதிப்படுத்தவேண்டும். 

;