india

img

மனித குலத்துக்கு ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் ஒரு பாடம்.... சாதி, மதத்தை விட மனிதநேயம் உயர்வானது.... ஸ்ரீநாராயணகுரு பிறந்தநாள் விழாவில் கேரள முதல்வர் பேச்சு....

திருவனந்தபுரம்:
ஆப்கானிஸ்தானின் நிகழ்வுகள் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய பாடம்என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.மத அடிப்படைவாதம் என்ற பெயரில் நெருப்பை பற்றவைத்தால், மக்களும் தேசங்களும் அந்த நெருப்பில்விழுந்து எரியும் என்பதே அந்தப்பாடம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீ நாராயண குருவின் 167-ஆவதுபிறந்தநாள் விழாவை திங்களன்று (ஆக.23) கேரள முதல்வர் தொடங்கிவைத்தார். அதில் மேலும் அவர் பேசியதாவது: 

உலகின் பல்வேறு பகுதியிலும் மனிதர்கள் பிளவுபட்டு, இனங்களாக மோதிக்கொண்டு அழிந்து போகிறார்களோ அங்கெல்லாம் சென்றடைய வேண்டிய பாடத்தை குரு முன்வைத்தார்; ‘மனிதர்கள் ஒன்று’ என்றமதத்தை அவர் தூக்கிப் பிடித்தார். மதத்தின் பெயரால் மனிதன் கடத்தப்பட்டு தலை துண்டிக்கப்படும் காலம் இது. வரலாற்றில் இதுவரை மதவெறி மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மனிதகுலத்தை இந்த அளவிற்கு ஒடுக்கியதில்லை. இத்தகைய யுகத்தில், மனிதகுலத் தின் மேன்மைக்கான குருவின் போதனைகள் மிகவும் பொருத்தமானவை. சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற் பட்டு மனிதநேயத்தை நிலைநிறுத்தி நாம் முன்னேற வேண்டும். அதைச் செய்யும்போதுதான், நாம் குருவை மதிக்கிறோம் என்று சொல்ல முடியும்.பாலஸ்தீனம் மற்றும் ரோஹிங் கியா அகதிகள் விசயத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே கூட அவ்வப்போது இனவெறி இழையோடுகிறது. இது பஞ்சாப் மற்றும் காஷ்மீர்பிரச்சனைகளின் அடிநாதமாக நின்றது. சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதகுலத்தின் ஒற்றுமை பற் றிய குருவின் செய்தியே இத்தகைய சமூகக் கோளாறுகளுக்கான இறுதிசிகிச்சை. ‘சாதி’, ‘மதம் எதுவாயினும் மனிதன் நன்றாக இருந்தால் போதுமானது’ என்று உலகிற்கு போதித்தமாபெரும் குரு நம்மிடம் இருக்கிறார்.மனிதாபிமானம் எரியாமல் இருக்கஉலகிற்கு மனித அன்பின் மகத்தானசெய்தியை உணர்த்திய ஒரு சிறந்தமனிதர் அவர்.

இவ்வாறாக ஒட்டுமொத்த மனித இனத்திற்காக எக்காலத்துக்கும் தேவையான அறிவுரைகளை வழங் கிய ரிஷிவர்யன் ஒரு கேரளர். அவர்எல்லா மனித இனத்திற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். குரு காட்டும் பாதையில் மனிதகுலம் உயிர்வாழ்வதை உலக நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.சாதி, மதம் அல்லது இனத்தின் பெயரால் யாரும் வாளை எடுக்க முடியாது, ‘மனிதாபிமானம் என்பது மனிதனின் இனம்’ என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும். மனிதாபிமானமே மனிதனின் சாதிஎன்பதை மனதில் நிலைநிறுத்தினால் சாதி மத இனத்தின் பெயரால் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

குரு மற்றும் குருவின் செய்திகளை மறந்து விட்டு நம்மால் முன்னேற முடியாது. இந்த அங்கீகாரத்தை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் காணலாம். குருவின் ‘சாதியில்லா பிரகடனம் ‘ நூற்று ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது. அந்த பிரகடனத்தின் 100-ஆவது ஆண்டு விழா கேரளா முழுவதும் அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் குருவின் சிலை அமைக்கப்பட்டது. கேரளாவின் முதல் திறந்தநிலை பல்கலைக் கழகம் நிறுவப்பட்டபோது, அதற்குஸ்ரீ நாராயண குருவின் பெயரை சூட்டினோம். இது தவிர, செம்பழந்தியில் ஒரு மாநாட்டு மையம் கட்டப் பட்டது. இது ஒடிசாவில் உள்ள ஸ்தூபா கோவிலின் மாதிரியாக உள்ளது. குருவின் அளித்த செய்தியின் மதிப்பு நன்கு அறியப்பட்டதால், குருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் பங்களிப்புகளை காட்சிப்படுத்த முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. குருவின் போதனைகளின் மதிப்பைஉணர்ந்த இந்த அரசு சாதி வேறுபாடின்றி மக்களை வழிபாட்டுக்காக கோவிலுக்குள் அனுமதித்தது. இடதுஜனநாயக முன்னணி அரசு குருவின் செய்தியை முன்னெடுத்துச் செல் லும் அரசு.இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார். 

;