states

எழுகவே மக்கள் எழுகவே!

(எழுகவே படைகள் எழுகவே பாடல் மெட்டு)

எழுகவே மக்கள் எழுகவே
முடியவே ஆட்சி முடியவே
ஆட்டம் போட்ட மோடி கும்பல்
ஆட்டம் முடியப் போகுது
ஓட்டுப் போட்டு நாட்டைக் காக்கும்
காலம் வந்தது.
(குழு) ஆட்டம் போட்ட மோடி கும்பல்
ஆட்டம் முடியப் போகுது
ஓட்டுப் போட்டு நாட்டைக் காக்கும்
காலம் வந்தது.
(எழுகவே)

இளைஞர் வாழ்வைக் கெடுத்தீர்கள்
வேலையின்றிப் போச்சு
உழவர் கூட்டம் பகைத்தீர்கள்
உயிர்ப்பலி ஆச்சு
நிதியைப் பறித்துக் கொண்டீர்கள்
ஜி எஸ்டி பேரில்
நிறைய திட்டம் செயலாக்க 
பணமில்லை பாரீர்
அள்ளித் தருவீர் யோகிக்கு
எதுவுமில்லை (பின)ராயிக்கு
(குழு) அள்ளித் தருவீர் யோகிக்கு
எதுவுமில்லை (பின)ராயிக்கு
உழைக்கும் மக்களே
ஒன்று கூடுங்கள்
காலம் வந்தது ஓட்டுப் போடுங்கள்
மாநிலம் தவிக்க ஒன்றியம் கொழுக்க
என்ற நிலையை மாற்றுங்கள் 
(எழுகவே)

காவிக் கூட்டக் கலவரங்கள்
இனி இங்கு இல்லை
ரத்தம் குடிக்கும் ராஜாங்கம்
நீடித்ததில்லை
உனக்கும் எனக்கும் அணைபோட
ஒருவரும் இல்லை
நமக்காய் நாமே போராடத்
தடையேதும் இல்லை
புல்டோசர் ஆட்சி மாற்றுவோம்
புதிய ஆட்சி ஏற்றுவோம்
(குழு) புல்டோசர் ஆட்சி மாற்றுவோம்
புதிய ஆட்சி மாற்றுவோம்
கொடுமை தொலையவே
கொள்கை முழங்குவோம் 
மாற்றம் காணவே
கோட்டை ஏற்றுவோம்
கனன்று கிடக்கும் 
கனலைக் கொண்டு
கயவர் கொடுமை கொளுத்துவோம்
(எழுகவே)

எழுகவே மக்கள் எழுகவே
முடியவே ஆட்சி முடியவே
ஆட்டம் போட்ட மோடி கும்பல்
ஆட்டம் முடியப் போகுது
ஓட்டுப் போட்டு நாட்டைக் காக்கும்
காலம் வந்தது
(குழு) ஆட்டம் போட்ட மோடி கும்பல்
ஆட்டம் முடியப் போகுது
ஓட்டுப் போட்டு நாட்டைக் காக்கும்
காலம் வந்தது.
-  ப.முருகன்

;