states

img

வரலாற்றில் முதல்முறையாக முதல்கட்ட தேர்தலுக்கு முன்பே ரூ.4,650 கோடி பறிமுதல்

புதுதில்லி, ஏப். 15- நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 அன்று துவங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக  நடைபெற உள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்டமாக வரு கிற ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் (மார்ச் 16) இதுவரை (ஏப்ரல் 14) தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் 4,650 கோடி  ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த பொருட்களில் 45 சதவீதம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ.778.5 கோடியும், குஜராத்தில் ரூ. 605.33 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.460.8 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.431.3 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது மொத்தமாக 3,475 கோடி ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்ட தேர்தலிலேயே ரூ.4,650 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

;