states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வரி அல்ல… வழிப்பறி

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக இருந்த போது எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். ஹோட்டல் முதல் டூவீலர் பழுது பார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?  ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்ட லுக்குச் சென்றால், பில்-இல் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து ‘கப்பர்சிங் வரி’ (கொள்ளை) என்று புலம்புகின்றனர்!   அடுத்து என்ன செல்பி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய் யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகிறது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.  ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாஜகவின்   ‘முதுமை மோசடி’

“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தில் எழுபது வயது நிறைந்த முதியோருக்கு காப்பீட்டு தொகை அதிகரிப்பாம்... கேட்க இனிக்கும். ஆனால் இந்த அறிவிப்பின் பின்னால் பெரிய சதி இருப்பதை அறிவோமா ? பொதுவாக முதுமை என்பதை அறுபது என்றே கணக்கிடு கிறோம். அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது அறுபதே. முதியோர் பென்ஷன் மற்றும் இதர சலுகைகள் பெறும் வயதும் அதுவே. முதியோர் சலுகை பெறும் வயதை 70 ஆக உயர்த்த வேண்டும் என்பது மோடி சர்க்காரின் நெடிய சதி. அதன் மூலம் சலுகை பெறுவோர் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்துவிடலாம் என்பது குறுக்குசால் ஓட்டும் கணக்கீடு.  58 இலோ 60திலோ பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த பத்து பன்னிரண்டாண்டுகள் முதியோர் சலுகை எதுவும் கூடாது என்பது அநீதி அல்லவா?  70 வயதுவரை முதுமை காப்பீடு அனுபவிக்கக் கூடாது என்பது தண்டனை அல்லவா ?  பாஜக தேர்தல் அறிக்கை மூலம் முதுமை வயதை மெல்ல எழுபதாக நகர்த்தி 60 -70 வயது முதியோர் முதுகில் குத்தி இருக்கிறது. இந்த துரோகிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவீர்! - சுபொஅ

;