states

img

ஒரிஜினல் கூட்டுக் களவாணி

மோடி ஆட்சியில் பல நூற்றுக்கணக்கான கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடித்து தம்மை கொழுக்க வைத்துக் கொண்டுள்ளன. எனினும் அதானியின் அசுர வளர்ச்சி இந்த கொள்ளை லாபத்தின் முதன்மை உதாரணம்.
l    மோடி ஆட்சி அமைந்தது 2014ம் ஆண்டு. 2015ம் ஆண்டு அதானியின் சொத்துமதிப்பு 6.6 பில்லியன் டாலர். அதாவது ரூ.54,780 கோடி.
l    ஆறே ஆண்டுகளுக்கு பின்னர் 2021ல் அதானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன்டாலர்களாக அதாவது 4,15,000 கோடியாக உயர்கிறது.
l    அடுத்த ஆண்டு 2022ல் 90 பில்லியன் டாலர்களாக அதாவது ரூ.7,47,000 கோடியாக விண்ணில் பாய்கிறது.
l    ஏழே ஆண்டுகளில் ரூ.54,780 கோடியாக இருந்த சொத்து ரூ.7,47,000 கோடியாகசர சரவென உயர்கிறது.
l    இந்த சூழலில்தான் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்து அதானி குழுமத்தின் தகிடுதத்தங்கள் அம்பலமாக சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலராக 3,32,000 கோடி ரூபாயாக சரிகிறது.
l     ஆனால் ஒன்றிய அரசாங்கம் தனது உற்ற நண்பனை அதாவது, கூட்டுக் களவாணிகளை கைவிடுமா? இல்லை. பல உதவிகள் செய்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் பாதக விளைவுகளை மறைக்கிறது. புலனாய்வு அமைப்புகள் இந்த அறிக்கையை  விசாரிக்க மறுக்கின்றன. வினோதமாக (அல்லது திட்டமிட்டு) நீதிமன்றமும் புலனாய்வை தவிர்க்கிறது.
l    எனவே அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் 84 பில்லியன் டாலராக ரூ.6,97,000 கோடியாக உயர்கிறது.
l    ஒரு கட்டத்தில் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு அதானி இந்தியாவின் முதல் பணக்காரராக இடம் பெற்றார். 

இது எப்படி சாத்தியமாகிறது?

l 6 விமான நிலையங்கள்/ஏராளமான  துறைமுகங்கள்/ மின் திட்டங்கள்/ ஆஸ்திரேலியா உட்பட பல நிலக்கரி சுரங்கங்கள் என அனைத்தும் அதானிக்கு தரப்படுகின்றன. மும்பை விமான நிலையத்தை நடத்திய கார்ப்பரேட் மிரட்டப்பட்டுஅந்த விமான நிலையம் அதானி கைகளுக்கு வருகிறது. அம்புஜா சிமெண்ட் அதே போல மிரட்டலுக்கு பின்னர் அதானி கைகளுக்கு! கிருஷ்ண பட்டணம் துறைமுகமும் மிரட்டலுக்கு பின்னர் அதானி கைகளில்!
l    இன்று இந்தியாவின் கடற்கரை பகுதிகளில் 500 கி.மீ.ருக்கு ஒரு துறைமுகம் அதானி கைகளில்! இந்திய துறைமுகங்களில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் 57% அதானி குழுமத்தின் கைகளில்!
l    பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சின்ட்வாரா எனும் இடத்தில் அதானி குழுமம் கட்டும் 1320 மெ.வா. மின் நிலையத்துக்காக 5,607 ஹெக்டர் நிலம் பறிக்கப்படுகிறது 31 கிராமங்கள் அழிக்கப்படுகின்றன. 6 கிராமங்கள்முற்றிலும் மூழ்கடிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலும் மக்களும் எப்படி பாதிக்கப்பட்டாலும் அதானியின் லாபம்தான் முன்னுரிமை!
l    2015ல் ஃபோர்பஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 500 இடத்தில் கூட இல்லாத அதானி 2024ல் 17வது இடத்தை பிடித்துள்ளதில் என்ன ஆச்சர்யம் உள்ளது? 
l    2002 குஜராத் கலவரத்தை பெரு முதலாளிகள் அமைப்பு CIIன்  ரத்தன் டாட்டா/ ராஜிவ் பஜாஜ் போன்றோர் விமர்சித்த பொழுது அந்த அமைப்பை உடைத்து குஜராத்துக்கு தனி அமைப்பை உருவாக்கியவர் அதானி! பின்னர் CII அமைப்பு மோடியிடம் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டது. இந்த பேருதவிக்கான பிரதிபலன் அதானியின் அசுர வளர்ச்சி.ஆனால் இத்தகைய கூட்டு கொள்ளை முதலாளித்துவ வளர்ச்சி இந்திய சமூகத்துக்கு பேராபத்து.

கூட்டுக் களவாணி முதலாளித்துவம் ஒழிப்போம்! பாஜகவை தோற்கடிப்போம்!  தேசம் காப்போம்!

- அ.அன்வர் உசேன்


 

 

;